பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி!

 10 வருடத்திற்கு முன்பாகவே பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் துவங்கப்பட்டது. பெங்களூருவின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் – சிவில் பிரிவில் காலி யாக இருக்கும் 25 இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

இதர தேவைகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு மற்றும் கேட் 2019 தேர்வு இவற்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவைப்படும். இத்துடன் கன்னட மொழியில் பேசும் திறன் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரி பார்த்தல் போன்ற முறைகளில் இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bengaluru 560 027.

கடைசி நாள் : 27.4.2019

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு