பாஜக வெளியிட்ட உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரிலான தேர்தல் அறிக்கை முழு விபரம்!

பாஜக வெளியிட்ட உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரிலான தேர்தல் அறிக்கை முழு விபரம்!

இந்திய பார்லிமெண்ட் ர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங் களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் , தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அப்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதியில் 75 அம்சங்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் 2022-க்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட 45 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ:

* 5 ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.

* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

* சிறு விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6,000 என்ற அளவிலான உதவித் தொகை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்,

* 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் 100% பகுதிகளும் கொண்டுவரப்படும். அனைவருக்கும் வீடு, மின்சாரம், கழிவறை வழங்க ஏற்பாடு செய்யப்படும்

* அனைவருக்கும் வங்கிக் கணக்கு ஏற்படுத்த ஆவன செய்யப்படும்.

* கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

* ஜிஎஸ்டி வரி, நடைமுறைகள் எளிமையாக்கப்படும்

* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

* சட்டப்படி ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும்

* நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், அதற்குத் தனி ஆணையம் அமைக்கப்படும்

* நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

* 60,000 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

* நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

* தீவிரவாத விஷயத்தில் சகிப்பின்மைக் கொள்கை 100 சதவீத அளவில் கடைபிடிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* நாடு முழுவதும் பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்க 100 கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

*இந்தியாவில் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும்

*காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட விதி 35A மற்றும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும்.

*5 ஆண்டுகளுக்குள் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழ்வோரை ஒற்றை இலக்க சதவீத அளவிற்குள் கொண்டுவரப்படும்

*கால்பண்ணைத் தொழிலுக்கு மத்திய அரசு சிறப்பு முக்கியத்துவம் வழங்கும். கால்நடைகளின் வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்கள் காரணமாக அவற்றின் இயக்கம், பால் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த நோய்களைத் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடை தீவனப் பற்றாக்குறையைப் போக்க தேசிய அளவில் திட்டம் ஒன்று ஒதுக்கப்படும்.

*கடலிலும் உள்நாட்டில் உள்ள நீர்நிலைகளிலும் மீன் மற்றும் நண்டு முத்துச்சிப்பி போன்ற போன்றவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் வகுத்து நிதி உதவி வழங்கப்படும். இதற்கென ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*நாடெங்கிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூபாய் 100 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*உலக உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்க நடவடிக்கைகள் துவக்கப்படும். இதற்காக தொழில் தொழில் நடத்துவதற்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

*புதிய தொழில் கொள்கை ஒன்று அறிவிக்கப்படும்.

*புதிய தொகுப்பு தொழில்கள் உருவாக்குவதன் மூலம் உற்பத்தி வளர்ச்சிக்கு உதவ திட்டங்கள் வகுக்கப்படும்.

*புதிய தொகுப்பு தொழில்களில் அரசாங்கம் முதலீடு செய்யும்.

*இந்த தொகுப்பு தொழில்களில் உற்பத்தியை அரசு கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு என சிறப்பு திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

இந்தப் பிரிவை சேர்ந்த தொழில் முனைவோரின் தொழில் நுணுக்கத்தை மேம்படுத்த தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் தேசிய சிறு தொழில் இன்குபேஷன் மையங்களை உருவாக்கி சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் செய்யும்.

தேசிய அளவில் வர்த்தகர் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வியாபாரிகளுக்கென ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம் ஒன்று அமல் செய்யப்படும். விவசாயிகளுக்கு என தனியாக கிரெடிட் கார்டு வழங்கப்படுவதுபோல, வியாபாரிகளுக்கு என தனியாக கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களைக் குறைந்த காலத்தில் அனுப்பவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைந்த கால அளவில் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2022ம் ஆண்டுக்குள் எல்லா மீட்டர் கேஜ் பாதைகளும் பிராட் கேஜ் இருப்புப் பாதைகள் ஆக மாற்றப்படும். எல்லா இருப்புப் பாதை தடங்களும் மின் இணைப்புப்பெற்று ரயில்கள் மின்சாரம் மூலம் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இருப்புப் பாதை சரக்குப் போக்குவரத்து நவீன மயமாக்கப்படும். எல்லா ரயில்வே நிலையங்களிலும் வைஃபி வசதி வழங்கப்படும். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை 200ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஏற்படுத்தப்படும். 4 ஆண்டு கொண்டதாக ஆசிரியர் பயிற்சித் திட்டம் மாற்றப்படும். இந்தியா முழுக்க கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகள் 200 புதிதாக துவக்கப்படும்.

50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களிடமிருந்து அரசின் கொள்முதலில் 10% பெற்றுக்கொள்ளப்படும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் பெறுவதை வருவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவோம். இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!