அடேங்கப்பா.. அமேசான், நெட்ப்ளிக்ஸை விட அதிக விளம்பரம் செய்த பிஜேபி!

அடேங்கப்பா.. அமேசான், நெட்ப்ளிக்ஸை விட அதிக விளம்பரம் செய்த பிஜேபி!

விளம்பரம் செஞ்சே பிழைப்பு ஓட்டுபவர் என்ற பெயர் மோடி-க்கு உண்டு. ஆம்2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விளம்பரத்துக்காக நான்கு ஆண்டு மத்தி வரையில் ரூ.4,343 கோடி செலவு செய்துள்ள நிலையில் தற்போது முன்னணி வணிக நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் பா.ஜ.க முதலிடத்தில் இருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் என்று அழைக்கப்படுகின்ற பார்க் (BARC) வெளி யிட்டுள்ள தகவலின், உலகின் பெரும் பணக்கார நிறுவனங்களான அமேசான், நெட்ப்ளிக்ஸ், ட்ரிவேகோ போன்வற்றை பின்னுக்கு தள்ளி தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலிடத்தில் உள்ளது பாஜக.

5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த மாநிலங்களில், தொலைக்காட்சிகளை பாஜக விளம்பரங்களே ஆக்கிரமித்துள்ளது. கடந்த நவம்பர் 12-முதல் 16 வரையிலான தேதிகளில் பாஜக தொடர்பாக விளம்பரங்கள் 22,000 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி உலகின் பணக்கார நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை விட பாஜக விளம்பரம் இரு மடங்கும், அமேசான் நிறுவனத்தை விட மூன்று மடங்கும் அதிகமாக விளம்பரப்படுத்தியுள்ளது.

வேறு எந்த கட்சியும் இப்படியான அதிகப்பட்ச தொகையை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் இந்தியாவின் முதல் பணக்கார கட்சியான பாஜக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே விளம்பரங்களுக்கு அதிகளவு செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கியது. பாஜக ஆட்சியில் அமர்ந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் விளம்பரங்களுக்காக 5,000 கோடி செலவிட்டுள்ளது. இந்த தொகை மன்மோகன் சிங் தனது ஆட்சிக் காலமான 10 ஆண்டுகள் முழுவதும் செலவிட்ட தொகைக்கு சமம் என தெரியவந்துள்ளது.

இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் விளம்பரங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடிகளை வாரியிரைக்கும் மத்திய அரசு, கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பாக ஒதுக்கப்படும் நிதியை மிகப் பெருமளவு குறைத்து விட்டதாக தகவலறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மக்கள் வரிப்பணத்தை கொண்டு, கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்யாமல், அரசின் நலத்திட்டங்கள் முழுவதும் மக்களை சென்றடைந்தால் அவற்றிக்கு விளம்பரங்களே தேவை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்

error: Content is protected !!