நாட்டிலேயே பணக்கார கட்சி பாஜக! ஓராண்டு வருவாய் மட்டும் ரூ. 1,034.27 கோடி மட்டுமே! – AanthaiReporter.Com

நாட்டிலேயே பணக்கார கட்சி பாஜக! ஓராண்டு வருவாய் மட்டும் ரூ. 1,034.27 கோடி மட்டுமே!

கொல்கத்தாவை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த தங்களது 2016-17-ம் ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக நேற்று வெளியிட்டது. இதில் 7 தேசிய கட்சிகளின் ஓராண்டு ஒட்டு மொத்த வருவாய் ரூ. 1,559.17 கோடி என்றும் பாஜகவின் ஓராண்டு வருவாய் மட்டும் ரூ. 1,034.27 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 -2016ம் நிதி ஆண்டில் பாஜகவின் வருவாய் ஆக இருந்த நிலையில், 2016 -2017 நிதி ஆண்டில் இரண்டு மடங்காது அதிகரித்துள்ளது. இரணடாம் இடத்தில உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 225.36 கோடி என கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ. 100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கோடி ரூபாய் வருவாய் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இதனிடையே 7 தேசிய கட்சிகளும் கடந்த 2016-17ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1,288.26 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக பாஜக ரூ.710.05 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.321.66 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.173.58 கோடி என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இதில் ரூ.51.83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக 2016-17ம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 96.41 சதவீதம், அதாவது, ரூ.997.12 கோடி நன்கொடை, மானியங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மூலம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது.அதேபோல, கடந்த 2016-17ம் ஆண்டில் தேர்தல் பிரசாரம், தேர்தல் செலவுகளுக்காக ரூ.606.64 கோடியும், நிர்வாகரீதியாக ரூ.69.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இதோ:-

பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகளும் 2016-17-ம் ஆண்டில் மொத்தம் 1,559 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளன.

* இந்த 7 கட்சிகளும் 1,228 கோடியே 26 லட்ச ரூபாயை இந்த ஆண்டில் செலவிட்டு இருக்கின்றன.

* 2016-17-ம் ஆண்டில் பா.ஜனதாவின் வருமானம் ரூ.1,034 கோடி. காங்கிரஸ் கட்சியின் வருமானம் 225 கோடி.

* பா.ஜனதா அதிக பட்சமாக இந்த ஆண்டில் ரூ.710 கோடியை செலவிட்டு இருக்கிறது. இதில் தேர்தலுக்காக மட்டுமே ரூ.606 கோடியை இக்கட்சி செலவிட்டு உள்ளது. காங்கிரஸ் மொத்தம் ரூ.321 கோடியை செலவிட்டு இருக்கிறது. இதில் தேர்தல் செலவு ரூ.149 கோடி ஆகும்.

* தங்களுக்கு உள்ள 3 விதமான வருவாய் வழிகளில் ஒன்றான நன்கொடை மூலம் மட்டும் பா.ஜனதா ரூ.997 கோடியும், காங்கிரஸ் ரூ.50 கோடியும் ஈட்டியுள்ளன. இது தவிர கூப்பன் வினியோகம் மூலம் ரூ.115 கோடியை வருவாயாக பெற்று இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து இருக்கிறது.

* 7 தேசிய கட்சிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளும் தங்களுடைய தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கடந்த 5 ஆண்டுகளாக தாமதமாகவே தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது