பேயை பேயுடன் சேர்த்து வைக்கப் போராடும் நாயகனின் கதைதான் ‘பியாய்’! – AanthaiReporter.Com

பேயை பேயுடன் சேர்த்து வைக்கப் போராடும் நாயகனின் கதைதான் ‘பியாய்’!

விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசுந்தரம் மற்றும்  மாரிசன் மூவிஸ்  இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” பியார்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் முன்னணி நடிகர்  கதா நாயகனாகவும் முன்னணி நாயகி கதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். அதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும்  சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தற்போது நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.  இவர் இயக்கும் இரண்டாவது படம் ” பியார் “

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..”வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள் ..இந்த படத்தில் வித்தியாசமாக  ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க் காதல் என்றும் சொல்லலாம். ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.  ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி? என்று இயக்குனரிடம் கேட்ட போது. சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான்  திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன் என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்.

ஒளிப்பதிவு  –  N.ஆனந்தகுமார்

இசை  –    A.K.ரிஷால் சாய்

பாடல்கள்  –   வ.கருப்பன் 

எடிட்டிங்   –    ரமேஷ் வேலுகுட்டி

நடனம்   –  அசோக்ராஜா

ஸ்டண்ட்    –   சூப்பர் சுப்பராயன் 

கலை  –  முத்துவேல்

தயாரிப்பு –   விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசந்தரம், மாரிசன் மூவிஸ்.