பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ! – AanthaiReporter.Com

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மதுமிதா தன் கையை வெட்டி துன்புறுத்திக்கொண்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதற்கான காரணம் என்னவென்பது தெளிவாக சொல்லப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகுரிய அந்த பகுதியை ஒளிபரப்பவில்லை. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மதுமிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த மதுமிதா, ”மழை வருவதற்காக நான் சொன்ன கவிதை தான் பிரச்சனைக்கு காரணம். வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரும் மழை வடிவில் கூட தண்ணீரை தமிழகத்துக்கு தரவில்லை என்று சொன்னேன். அதை 8 பேர் சேர்ந்து அரசியலாக்கி விட்டார்கள். அப்போ நான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்றேன். அதனை வெளியிடுவதும் வெளியிடாததும் சேனல் முடிவு பண்ணட்டும். என்றேன்

அப்போது என்னை சேரனும் கஸ்தூரி மட்டுமே எனக்கு ஆதரவாக பேசுனாங்க. பின்னர் ஷோவில் இருந்து லெட்டர் வந்தது. அரசியல் பேசாதீர்கள். இது ஒளிபரப் பபட மாட்டாது என்று அந்த லெட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவரை என்னை கிண்டல் செய்து வந்த போட்டியாளர் களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. கேங் ஹராஸ்மன்ட் பண்ணாங்க. எனக்கு ஆதரவாக பேசியதற்காக கஸ்தூரி மேடத்தை தகாத வார்த்தையில் பேசுனாங்க. அப்போதான் என்ன பன்றதுனு தெரியாம என் கைய நான் கட்பண்ணிட்டேன்.

பின்னர் நான் என்ன பேசுனேன் என்று எனக்கு நியாபகம் பேசவில்லை. என் தமிழ்நாட்டுக்காக நான் பேசுன கவிதைக்கு ஒரு பொண்ணுனு பார்க்காம எவ்ளோ அசீங்கப்படுத்துவீங்க. அந்த கவிதையில என்ன தப்பு இருக்கு. அந்த கவிதைய தப்புனு சொல்லிட்டு என் ஊருல இருக்குற எல்லோரையும் மக்களுக்கு அடையாளம் காட்டாம விடமாட்டேன் என்றார்.

கமல் சார் அத பற்றி விசாரிக்காதது பெரும் வருத்தத்தை அளித்தது. கமல் சாரிடம் நான் வைக்கும் வேண்டுகோள் என்னென்னா ஜஸ்ட் 40 நிமிட நிகழ்ச்சியை மட்டும் பார்க்காம முழு நாள் நிகழ்ச்சியை பாருங்க.. ஆல்லதுய்உங்கள் ரசிரையோ கட்சித் தொண்டனையோ உள்ளே அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.