பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி! – AanthaiReporter.Com

பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் என்ற சுருக்கமாக அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இது ஒரு பொதுத்துறை நிறுவனம். இதன் போபால் கிளையில் காலியாக உள்ள 229 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் :
 கெமிக்கல் இன்ஜினியரிங் 1, சிவில் இன்ஜினியரிங் 3 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு அப்ளிகேஷன் இன்ஜினியரிங் 4, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 43 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 24, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 3, எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் 13 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 2, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்கில் 7, ஐ.டி.,யில் 1, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1, மெக்கானிக் இன்ஜினியரிங் 60 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 40, மெட்டலர்ஜியில் 2, மாடர்ன் ஆபிஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோவில் 20 என மொத்தம் 229 காலியிடங்கள் உள்ளன.
வயது : விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்.,
பட்டப் படிப்பு அல்லது மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : இந்தப் பணியிடங்களுக்கு வரும்
விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், பின் அதனை பிரின்ட் அவுட் எடுத்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Pos t Box No-35, Post office, Piplani, BHEL Bhopal – 462022 (M.P.)

கடைசி நாள் : 2017 டிச., 17.

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு