.எங்க ஊர்க்காரன் பாரதி..!

.எங்க ஊர்க்காரன் பாரதி..!

The Man to remember……..

எந்த ஒரு மாற்றத்தையும் தன்னிடம் / தன் வீடு / தன் சமூகத்தில் இருந்து ஆரம்பிப்பவன் தான் உண்மையான தலைவன். ஆனால் இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்கள் தொன்டனில் இருந்து ஆரம்பித்து கடைசியாய் கூட நமக்கோ நமது வீட்டுக்கோ அல்லது நமது சமுதாயத்துக்கோ வந்துவிடக்கூடாது என நினைப்பவன் தான் இந்த கால அரசியல்வியாதி – பாரதி என்ற ஒரு உயர்சாதி மனிதர் தான் என்னைக்கேட்டால் உண்மையிலே ஜாதி ஒழிய போராட்டம் செய்த ஒரு புதுமைக்கவி. இன்று அவரை நினைவு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

r 1

அந்த காலத்தில் பால் வாங்கி காப்பி / தேனீர் செய்து குடிக்கும் வசதியில்லாதவர்களுக்காவே கிளாப்பு கடை மற்றூம் தெரு தேனீர் விடுதிகள் இருந்தன. மருந்துக்கு கூட அங்கே மேல் சாதி என தனக்கு தானே ஒரு காம்ப்ளக்ஸ் பெயின்ட்டை அப்பி கொண்ட சில கிரகங்கள் அங்கே செல்லாது. அப்படி இருந்த காலகட்டத்தில் வட்டில் காப்பியை எல்லா சாதியினருடன் சென்று அருந்துபவரில் ஒருவர் பாரதி. அவர் அங்கே நின்று வேறு சாதிக்காரன் போட்ட காப்பியையும் அவர்கள் உபயோகித்த கிளாஸ்களில் பாரதி அருந்துவதை அவ்வழி செல்லும் ஆட்கல் ஏதோ கலிகால கோளாறாய் தான் பாரதியை நினைத்தார்கள். அதை கொஞ்சமும் மனதில் எடுத்து கொள்ளாத பாரதி தன்னுடன் பாரதி தாசனையும் அழைத்து சென்று காப்பி அருந்தும் வழக்கம் இருந்ததாம்.

அப்போது கூட காப்பி அருந்தும் பாரதிதாசனுக்கு ஒரே கவலையாய் இருக்குமாம். ஏன் என்றால் அப்போது பாரதிதாசன் பள்ளி ஆசரியர். அவர் அந்த மாதிரி கடையில் நின்று காப்பி அருந்துவதை மிகவும் ஒரு கேவலமான செயலாய் தான் மக்கள் எண்ணினர். ஆனாலும் பாரதிதாசனுக்கு பாரதி மேல் மரியாதை மிக அதிக அளவில் இருந்த முக்கிய காரணம் – பாரதி ஏதோ சீன் போடவோ அல்லது காப்பிக்கு வீட்டில் வக்கு இல்லாமலோ அங்கே காப்பி குடிக்க செல்வதில்லையாம். அவரின் உண்மையான நோக்கம் சாதி ஒழிப்புத்தானாம். நிறைய தடவை பாரதியே பாரதிதாசனிடம் கூறியிருக்கிறாராம் – எனது மகள் ஏதோ ஒரு தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒரு ஆண் மகனை இழுத்து கொண்டு ஓடி எங்காவது சென்று திருமணம் செய்து பின்பு ஒரு நாளில் அப்பா நான் அவருடன் நன்றாக வாழ்கிறேன் என்று சொல்வதை தான் மிகவும் அதிகமாய் விரும்புகிறேன் என்று………….இவனல்லவா தலைவன் இங்கிருக்கும் பலர் சாதி ஒழிப்பு மறந்தும் தனக்கோ தன் குடும்பத்துக்கோ வந்துவிட கூடாது என தனக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லா காதலர்களின் காதலோடு காதலனின் தலையையும் சேர்த்து தன்டவாளத்தில் நசுக்கும் இவர்கள் எங்கே? RP

error: Content is protected !!