கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தேன் – பாக்யராஜ் ஓப்பன் டாக்! – AanthaiReporter.Com

கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தேன் – பாக்யராஜ் ஓப்பன் டாக்!

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா  பிரசாத்லேப்-பில் நடைபெற்றது,

இவ்விழாவில் பாக்யராஜ் பேசும் போது, “கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிராஜ் இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம். அனைவரும் பயந்தார்கள்..ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”என்று கேட்டான். அதற்கு சிறுவன் சொன்னான், ” கிராக் ஆனால் நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” என்றார். ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை

இந்த கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே நிறைய கஞ்சா அடிச்சி இருக்கேன். கோயம்புத்தூரில் குட்டப்பார்க்கில் உட்கார்ந்துகொண்டு அடிச்சிருக்கேன். அந்த பழக்கம் எனக்கு எப்படி வந்தது என்றால்….என்னிடம் உதவியாளராக இருந்தவர் விஸ்வம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவரை நான் என்னுடைய நாடகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தேன். அந்த சமயத்துல அவர் ராமநாதபுரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அடிக்கடி கேரம் போர்டு ஆட வருவார். கேரம்போர்டு ஆடும்போது சிகரெட் பிடிப்பார். அந்த சிகரெட்டின் முனை ஒரு மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்து, ’இது என்ன?’என்று கேட்டேன். சிகரெட்டின் உள்ளே கஞ்சா துகள் வைத்திருப்பதை சொன்னார். கஞ்சா துகளை சிகரெட் உள்ளே திணித்து வைப்பதற்காகவே அவர் ஒரு உதவியாளரை வைத்திருந்தார்.

என்னிடம் ஒரு சிகரெட்டை நீட்டினார். ‘நான் சிகரெட் குடிப்பேன். ஆனால், இந்த சிகரெட்டை குடிப்பதற்கு பயமாக இருக்கிறது’ என்றேன். ’அந்த பயத்தை போக்குவதற்குத்தான் இது’ என்று கொடுத்தார். சரின்னு வாங்கி குடிச்சேன். அது ஒரு மாதிரியா நல்லாத்தான் இருந்துச்சு. அதன் பின்னர் கேரம் போர்டு ஆடும்போதெல்லாம் குடிப்போம். சில நேரங்களில் அது நல்லாவே வேலை செய்யும். நமக்கு இல்லாத ஐடியாக்கள் எல்லாம் அந்த கஞ்சாவால் வரும்.

ஒரு நாள் எல்லோரும் உட்கார்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருக்கும்போது ஒருவன் சிரித்தான். ஏன் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் சிரிப்பான். ஒருத்தன் சிரித்தால் அடுத்தடுத்து எல்லோரும் சிரிப்போம். அப்போதுதான் சிந்தேன். நாம் போக நினைத்த பாதையை விட்டுவிட்டு தடம்மாறிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அத்தோடு புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன். சினிமாவில் எனக்கு உதவியாளராக விஸ்வம் வந்தார். அப்போது அவர் கையில் சிகரெட் இருப்பதைபார்த்து, இத நான் விட்டதால்தான் நல்லா இருக்கிறேன். நீயும் விட்டுவிடு என்றேன். களவும் கற்றுமற என்பது மாதிரி சில விசயங்களை கற்றுக்கொண்டு விட்டுவிடவேண்டும். சிகரெட்டையும் நிறுத்தி 15 வருடங்களுக்க்கு மேல் ஆகிவிட்டது.

இதுக்கிடையிலே தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பிட்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வர வேண்டும் என்பது என்கனவு” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். தயாரிப்பாளர் மூர்த்தி பா சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும். என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ” எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு” என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்று தெரிவித்தார்.