ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!- – AanthaiReporter.Com

ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது!-

கி.மு. 600-ம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மருத்துவ முறைதான் ஆயுர்வேதம் . நோய் களைத் தடுப்பதோடு குணப்படுத்தவும் செய்யும் இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு வேரிலும், ஒவ்வொரு இலையிலும், ஒவ்வொரு மரப்பட்டையிலும் மருத்துவ குணம் உள்ளது என்று ஆயுர்வேதம் சொல்கின்றது. ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் நம்பப்படும் சூழ்நிலையில் நம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தான பிஜிஆர் -34, நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 50 சதவீதம் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்த தகவல் ஜர்னல் ஆப் டிரடிஷ்னல் அன்ட் காம்பிளிமெண்ட்ரி மெடிசின் (Journal of Traditional and Complementary Medicine) என்ற சர்வதேச அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் நீரிழிவு நோயால் ஏற்படும் ஆபத்தான பாதிப்புகளை குணமாக்குவதில்லை. இந்நிலையில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) பிஜிஆர் -34 என்ற ஆயுர்வேத மருந்தை உருவாக்கியது. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மருத்துவம் மற்றும் நறுமன தாவரங்களுக்கான மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) என்ற இரண்டு பரிசோதனை கூடங்களில் பிஜிஆர் -34 உருவாக்கப்பட்டது .இந்த மருந்தில் தருஹாரிதிரா, கிலோய், விஜய்சார், குட்மர், மஞ்சீஸ்தா மற்றும் மெத்தி என்ற 6 வகையான மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் கலவை உள்ளது.

இது குறித்து இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமானோர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோய்க்காக இதுவரை எவ்வித பயனுள்ள தீர்வும் காணப்படவில்லை. இதையடுத்தே மருத்துவ மற்றும் வாசனைப் தாவரங்களளுக்கான மத்திய நிறுவனம்,தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து இரண்டாம் வரை நீரழிவுக்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து பயனுள்ளது, பாதுப்பானது. மேலும், நோயை கட்டுப்படுத்துவதில் நோயாளிக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். தற்போதைய நீரழிவு நோய்க்கான மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் சிஎஸ்ஐஆர் அறிமுகப்படுத்தியுள்ள மருந்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு பக்கவிளைவுகளை குறைக்கும்’ என்று தெரிவித்திருந்தனர்.

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) வழிக்காட்டுதலின்படி பிஜிஆர் -34 ஆயுர்வேத மருந்தின் விளைவுகள் குறித்து புதுடில்லியில் உள்ள அகர்வால் மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக இன்சுலின் சாராத நீரிழிவு நோயாளிகள் 56 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 28 பேருக்கு பிஜிஆர் -34 மருந்து தொடர்ந்து 4 மாதங்களுக்கு அளிக்கப்பட்டு மாதந்தோறும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 28 பேருக்கு போலியான மருந்து வழங்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் பிஜிஆர் -34 மருந்து உட்கொண்டவர்களின் ரத்த சர்க்கரை அளவு பெரும் அளவு குறைந்தது. நீண்ட கால ரத்த சர்க்கரை அளவை நிர்ணயிக்கும் எச்பிஏ1சி பரிசோதனையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த மருந்தால் எந்த நோயாளிக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை.அதை தவிர நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வு, தசை வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பல்வேறு அறிகுறிகள் பிஜிஆர் -34 மருந்தை உட்கொண்டதன் மூலம் முழுமையாக குணமடைந்தது. நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அத்துடன் இந்த மருந்தால் நோயாளிகளின் ரத்த கொழுப்பு அளவிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.