சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் போன் தயார்! – AanthaiReporter.Com

சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் போன் தயார்!

சுகர் வந்த பேஷன்ட் போல எப்போதும், சார்ஜர் அல்லது பேட்டரி பேக்கப்போடு அலையும் மக்களுக்கு நல்ல விஷயம். வாஷிங்கடன் பல்கலைகழகம் சார்ஜே இல்லாமல் வேலை செய்யும் ஃபோன்களை கண்டுபிடித்திருக்கின்றன்ர். இதற்க்கு தேவையான பேட்டரி சிட்டு குருவியை சாகடிக்கும் அளவுக்கு வரும் ரேடியேஷன் நிறைந்த மொபைல் சிக்னல் டவரின் மூலம் கிடைக்கும்,

அது நம்மை சுற்றி இருக்கிறது. வீட்டீல் இருக்கும் போது வைஃபை சிக்னல் மூலமும் கிடைக்கும். ஒரு துளி கூட சிக்னல் இல்லாத இடத்தில் இதில் உள்ள சோலார் தகிடு மூலம் எனர்ஜி பெறப்பட்டு வேலை செய்யும் ஃபோன் இது. இந்த ஃபோனுக்கு தேவையான ஸ்க்ரீன் இங்க் ஈ லோ பவர் ஸ்க்ரீன் வகை என்பதால் அதிக பவர் தேவையில்லை.

 

அடிசினல் தகவல் ;

உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட டெல் லேடிட்டியூட் 7285 (Dell Latitude)விற்பனைக்கு வந்துள்ளது.

டெல் நிறுவனம் அதிக விலைமதிப்புடைய வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள், 12 இன்ச் கொண்ட இந்த டெல் 7285 லேடிட்டியூட்டின் விலை 1,199,99 டாலர்கள் ஆகும். வயர்லெஸ் சார்ஜிங் கீபோர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் மேட் 549.99 டாரல்கள். டெல் 2-இன்-1 மாடல் இன்டெல் கோர் i5-7Y54, 128 ஜிபி எஸ்.எஸ்.டி. மற்றும் 8 ஜிபி மெமரி.

13 இன்ச் கனவர்டெபிள் வெர்ஷன் கொண்ட டெல் லேடிடியூட் 7000 வரும் ஆகஸ்ட்டு மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.