விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை ஒரே வங்கி ஆகிறது!

விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை ஒரே வங்கி ஆகிறது!

பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நோக்கத்தைக் கெடுத்துவிடும். கிராமப்புறங்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதை தடுத்துவிடும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை ஒரே பெரிய வலுவான வங்கியாக இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

வங்கிகள் இணைப்புத் திட்டங்களை மேற்பார்வையிடும் அமைச்சரவைக் குழு இணைப்பு தொடர்பாக முடிவு எடுத்திருப்பதாக அருண்ஜெட்லி தெரிவித்தார். பியுஷ் கோயல் இக் குழு வில் அருண்ஜெட்லியுடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று வங்கிகளும் பலவீனமானவ அல்ல. இவற்றில் இரண்டு வலுவானவை என்று அருண் ஜெட்லி கூறினார்.

இந்த மூன்று வங்கிகளும் இணைவதால் உருவாகும் மூன்றாவது வங்கி பெரியதாகவும் வலுவானதாகவும் அமையும். இந்தியாவில் உள்ள 3வது பெரிய வங்கியாக அது அடையும் என்று நிதிச்சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மூன்று வங்கிகளும் என்ன கருதுகின்றன என்பதை அறிந்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று ராஜீவ் குமார் குறிப்பிட்டார்.

error: Content is protected !!