பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்! – AanthaiReporter.Com

பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபிசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017 – 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., புரபேஷனரி ஆபிசர்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலியிடங்கள்: 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 3,562 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

யார் விண்ணப்பிக்கலாம்:
 அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ
அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 
2017௭ ஆக.1ன் படி 20 – 30வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஆக., 16 முதல் செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

பிரிலிமினரி தேர்வு அக்., 7, 8 மற்றும் 14, 15 தேதிகளில் நடைபெறும்.

மெயின்  தேர்வு நவ., 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 2017, செப்.5,

விரிவான விபரங்களுக்கு  ஆந்தை வேலை வாய்ப்பு