வங்கி மோசடிகள் இப்போ 20% அதிகரிச்சுடுச்சு!

வங்கி மோசடிகள் இப்போ 20% அதிகரிச்சுடுச்சு!

அரசு துறை வங்கிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மோசடி குற்றங்களில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு இருந்ததுடன் ஒவ்வொரு 4 மணிநேரத்துக்கும் ஒரு முறை ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபடுகிறார் அல்லது பிடிபட்டு தண்டிக்கப்படுகிறார் என்றும் அது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் பேங்க் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 17 ஆயிரத்து 504 மோசடி வழக்குகள் பதிவாகின என்றும் அந்த மோசடி களில், அந்தந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் 2 ஆயிரத்து 800 பேர் அதாவது 12 சதவீதத்தை அந்த வங்கி ஊழியர்களே செய்துள்ளனர் எனவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல் சுவடு மாறுவதற்குள் நம் நாட்டின் வங்கி மோசடிகள் குறித்த புது அறிக்கை ஒன்றை டெலாய்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘அதிகரித்து வரும் வங்கி மோசடிகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும், ஒழுங்குமுறை இயக்கங்களை மேற் கொள்ள வேண்டியதும், மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளன. சட்ட நடவடிக்கைகள், கடன், துறைசார்ந்த செயல்பாடுகள் போன்ற அனைத்திலும் நிதிக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆய்வில் வங்கிகளில் எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கிறது என்ற புள்ளி விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி போலி ஆவணங்களை அளிப்பதன் வழியாகத்தான் அதிகளவிலான மோசடிகள் நடக்கின்றன. போலி ஆவணங்களை அளித்து 20 விழுக்காடு  அளவுக்கும்,  3ஆம் தரப்பு விற்பனையாளர்கள் மூலமாக 8 விழுக்காடு அளவுக்கும், மிகை மதிப்புகள் மூலமாக 10 விழுக்காடும், ஏடிஎம் மோசடிகளால் 9 விழுக்காடும், மொபைல் பேங்கிங் வழியாக 6 விழுக்காடும் மோசடிகள் நடந்துள்ளன.

அதேபோல, லஞ்சம் மற்றும் ஊழலால் 6 விழுக்காடும், பல்வகை நிதிகளால் 3 விழுக்காடும், தரவு திருட்டால் 2 விழுக்காடும், திருட்டுக்களால் 1 விழுக்காடும், அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதால் 1 விழுக்காடும், தவறான நிதி நிலைகளை அளித்ததால் 4 விழுக்காடும், தவறான விற்பனைகளால் 6 விழுக்காடும் மோசடிகள் நடந்தேறியுள்ளன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!