கரன்சி களேபரம் இன்னும் ஓரிரு வாரம் தொடரும்! ? – AanthaiReporter.Com

கரன்சி களேபரம் இன்னும் ஓரிரு வாரம் தொடரும்! ?

நாடெங்கும் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் நவம்பர் 11 (நேற்று) முதல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. வம்பர் 11-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம், ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை பணம் எடுக்க லாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

bank nov 12

இந்நிலையில் எப்படியோ நேத்தியிலே இருந்து ஏ.டி.எம். மையங்கள் மூலம் நம்ம செலவுக்கு பணம் கிடைச்சிடுமுன்னு ஜனங்க எதிர்பார்த்தாஙக். ஆனால் ஒரு ஏ.டி.எம். மில் கூட பணம் தேவைக்கேற்ப நிரப்பப்படலை. அதுனாலே பெரும்பாலான ஏ டி எம்-மில் பணம் தீர்ந்து போயிடுச்சு. நேத்திக்கு மதியானத்துலே இருந்து தமிழ் நாடு முழுக்க இருக்கற மிகப்பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் காலியாவே இருந்தது. இந் நிலை இன்னிக்கு இப்ப வரை தொடருது.

இது பத்தி ரிசர்வ் பேங்க் சீனியர் ஆபீசர் ஒருத்தர். ” ஆமாமுங்க.. இந்த ஏ.டி.எம். மெஷின்லேல் கொஞ்சூண்டு தொகையை தான் நிரப்ப முடியுது. இப்போதைக்கு 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே நிரப்ப முடியுமுங்கறதாலே 2 டூ 2.50 லட்சம் வரை தான் நிரப்ப முடியுது. இது ஜஸ்ட் ஒன் அவரிலே காலியாகி விடுது. அதே சமயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மெஷின்லேல் நிரப்புவதற்கான டெக்னாலஜி இன்னும் அப்டேட் செய்யலை.

இப்போல்லாம் நாம் பயன்படுத்தற கரன்சி நோட்டுகள்ளே 80 முதல் 85 ப்ர்சண்ட் வரையிலான ரூபாய் நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகதான். வெறும் 15 சதவீதம் தான் 100 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் மதிப்பில் உள்ள நோட்டுகளாக்கும். அதுனாலே இந்த நோட்டுகளை வைத்துக்கொண்டு மக்களின் முழு தேவையை நிறைவு செய்வது என்பதில் சிக்கல் உள்ளதை மறுக்க முடியாது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புது 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலே விட்டிருந்தால் இத்தினி பாதிப்புகள் வந்திருக்காது. தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் அதிகளவில் பணத்தை நிரப்பியிருந்தாலும் இந்த சிக்கலை தவிர்த்திருக்கலாம். ஆனால் இதற்கான முன்னேற்பாடுகளை செய்யத்தவறியது தான் சிக்கலுக்கு காரணம். ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்காமல் நிலவும் சிக்கல் இன்று மட்டுமல்ல. இன்னும் கொறஞ்சது ஒரு வாரத்துக்காவது தொடரும்” அப்படீன்னார்.

இதுக்கிடையிலே அன்றாட செலவுக்காக 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்குமுன்னு பேங்கில் கால் கடுக்க காத்திருந்தாலும் எல்லாருக்கும் ஹண்ட்ரட் ரூபீ நோட்டு குடுக்காம 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தான் தூக்கி நீட்டறாங்க. அதுனால்ந்ந் மூனு நாளா 500, 1000 ரூபாய் நோட்டுகளை வச்சிகினு தவியா தவிச்சவங்க, இப்போ புத்தம் புது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி காட்சிப்பொருளா ஒவ்வொருத்தர்கிட்டே காட்டிக்கினு இருக்காங்க

அது மட்டுமில்லாம இந்த நியூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து ஏதாவது பெரிய மால் அல்லது சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்கு போனால், 2 ஆயிரம் ரூபாய்க்கும் பொருளை வாங்க வேண்டியிருக்குது. இல்லாட்டால் ’எக்ஸ்கியூஸ் மீ.. எங்கக்கிட்டே சில்லறை கிடையாது வேணுமுன்னா பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வாங்க்கிரீங்களா?’ கூலா அரவிந்த்சாமி ஸ்டைலில் கேக்கறானுஹ.

ஆக. ஒரு பத்து நிமிஷ மோடி அறிவிப்பாலே ஜனங்க இப்போ வாரக்கணக்கில் புலம்பணுமுன்ங்கறது தலை விதி!