வங்காள தேர்தல்: முடிவுகளை எதிர்த்து வழக்கு? – AanthaiReporter.Com

வங்காள தேர்தல்: முடிவுகளை எதிர்த்து வழக்கு?

கொஞ்சம் கலவரம் மற்றும் சில உயிர் பலிக்களுக்கிடையே  வங்காளதேசத்தில்   நடந்து முடிந்த பொது தேர்தலில் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் பி.என்.பி (BNP) கட்சி வெற்றி பெற்ற நிலையில்  தங்கள் கட்சி எம்.பிக்கள் பதவி ஏற்கமாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 30ம் தேதி வங்காளதேசத்தின் 299 தொகுதிகளில் நடந்த பொது தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 288 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. எதிர்கட்சியான பி.என்.பி கட்சி தலைமையிலான கூட்டணி வெறும் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அதை தொடர்ந்து பொது தேர்தலில் பல முறைகேடுகளும் வன்முறைகளும் ஏற்பட்டதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பி.என்.பி கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வரும் ஜனவரி 3ம் தேதி பதவி ஏற்பார்கள் என்று வங்காளதேச அரசின் தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹாக் இனு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பி.என்.பி கட்சி சார்பில் வெளியான செய்தியில் ‘‘தேர்தல் முடிவுகளை எங்கள் கட்சி நிராகரிக்கிறது. எனவே எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யாரும் ஜனவரி 3ம் தேதி பதவி ஏற்க மாட்டார்கள்’’ என்று பி.என்.பி கட்சி அறிவித்தது.

ஜனநாயகத்தை மண்ணில் புதைத்த இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று பி.என்.பியின் கூட்டணி கட்சியான கோனோஃபோரம் கட்சி தலைவர் கமல் ஹோசைன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்