பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையில் வேலை வாய்ப்பு!

நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுகிறது. இவற்றுள் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை ஒன்று. இங்கு காலியாக உள்ள 174 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிட விபரம்: மெயிண்டெய்னரில் 134, சிஸ்டம்ஸ்-ஜூனியர் இன்ஜினியரில் 11, சிவில்-ஜூனியர் இன்ஜினியரில் 10, சிஸ்டம்ஸ் செக்சன் இன்ஜினியரில் 11, சிவில் செக்சன் இன்ஜினியரில் 8ம் காலியிடங்கள் உள்ளன.

தேவை என்ன?: மெயிண்டெய்னர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், வயர்மேன், பிட்டர், மெக்கானிக்-கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஐ.டி., கார்பெண்டரி, மேசன், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

ஜூனியர் இன்ஜினியர் – சிஸ்டம்ஸ் மற்றும் சிவில் பிரிவுக்கு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். செக்சன் இன்ஜினியரிங் பிரிவுக்கு இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 பிப்., 2.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு