பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு!

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு!

நம் நாட்டில் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிறகு சர்வதேச அளவில் அதிகம் பேர் இணையத்தை உபயோகிக்கும் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ள நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது.

தற்போதைய உலகில் மனிதர்களை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்றால் மிகை யல்ல.இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. இப்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு உலகத்தில் அங்கீகரிக்கப் பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலையில் மொத்தம் ஆயிரத்திற்க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இது அனைத்திலும் நமக்கு பயன் தரும் விடயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளால் பாதிப்புகள் என்ன ? அதைப் பற்றி எந்த சிந்தனையும் இன்றியே இன்றைய அறிவியல் வளர்ச்சி தினந்தோறும் வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. பிரச்சனைகள் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே அனைவரின் மனதிலும் குடியேறியுள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை..

இதனிடையே யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இயற்கை பொருட்களை கொண்டு பற்பசை,தேன்,நூடுல்ஸ்,கூந்தல் தைலம்,சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இத்தகைய பொருட்களில் ரசாயனக் கலப்பு இல்லை என்றும்,இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனிலும்,நேரடி ஷோரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் பதஞ்சலி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தற்போது பிஎஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையிலும் பதஞ்சலி நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சுதேதி சம்ரித்தி என்ற புதிய சிம் கார்டு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிம் கார்டு மூலம் ரூ.144-இல்  அன்லிமிடெட் வாய்ஸ்கால், 2ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றை பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்படுகின்றன. கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த சிம் கார்டுகள் விற்பனைக்கு வரவுள்ளன.

குறிப்பாக இதனுடன் மருத்துவ காப்பீடு,ஆயுள் காப்பீடு வசதிகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சிம்கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியில் பதஞ்சலி நிறுவன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!