ஆமாய்யா. ஆமா.. பெரியார் இந்தியாவை பிளவுப்படுத்தவே முயன்றார்!- ராம்தேவ் சர்ச்சை!

ஆமாய்யா. ஆமா.. பெரியார் இந்தியாவை பிளவுப்படுத்தவே முயன்றார்!- ராம்தேவ் சர்ச்சை!

பதஞ்சலி நிறுவனத் தலைவரான பாபா ராம்தேவ் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் “பெரியாரை பின்பற்றுபவர்கள் வளர்ந்துவருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப்பெரிய பிசாசு என்கிறார். லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சிறந்த மனிதர்களாக இருக்க முடியாது. அம்பேத்கரை பின்பற்றுவதாக கூறும் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நான் அவர்களுக்காக ஒரு சொல்லை உருவாக்கியுள்ளேன், அதுதான் அறிவுசார் பயங்கரவாதம். கருத்தியல் பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டங்களை உருவாக்க வேண்டும்” எனச் சில நாள்களுக்கு முன்பு பேசினார். இதில் பெரியார் மற்றும் அவரின் சித்தாந்தம் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார். இதை அடுத்து ராம்தேவை கைது செய்ய வேண்டும்,தஞ்சலி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற கோஷங்கள் #ArrestRamdev என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஐந்து நாள் இலவச யோகா முகாமை நடத்தி வரும் ராம்தேவ், தலித்துகளுக்கு ‘சன்யாச தீட்சை’ வழங்கியதாகவும், மக்களை தங்கள் சாதிகள் அல்லது மதங்களின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு பார்த்ததில்லை என்று கூறினார். மேலும் தன்னை பின்தங்கியவர்களுக்கு எதிரானவர் என்று வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்யப் படுவதாகவும் சாடினார். அதாவது பாபா ராம்தேவ் மீண்டும் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “பெரியாரைப் பின்பற்றுபவர்கள் சமுதாயத்தில் எதிர்மறையை அதிகரித்து  உள்ளனர் என்பதை நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். கடவுளைப் பின்பற்றுபவர்கள் முட்டாள் கள், கடவுளை வணங்குபவர்கள் குற்றவாளிகள் என்பதே பெரியாரின் கருத்து. ஆனால், இந்தியா வில் கடவுளின் மூலம் தான் நாம் நேர்மறையான சிந்தனையை வலுவாகப் பரப்புவதற்கும், நம்புவதற்கும் சிறந்த கலாச்சாரம் நம்மிடம் உள்ளது.

பிரிவினை சக்திகள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் நான் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. அதே நேரத்தில் எதிர்மறையானது வெற்றிபெறாது என்பதை தெளிவு படுத்துவதற்கு நான் இருக்கிறேன். இதனால் தான் நான் சாதியத்தை பின்பற்றுகிறேன் என்று சிலர் வேண்டுமென்றே பரப்பிவிடுகிறார்கள். அது உண்மையாக இருந்தால், நான் ஏன் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கப்போகிறேன்.

#ArrestRamdev என்ற கோஷம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் பிரபல மடையத் தொடங்கியதும், #Salute_Baba_Ramdev என்பதும் பிரபலம் அடைந்தது. எப்போதும் எதிர்மறையை எதிர்கொள்ள நேர்மறை அதன் இருப்பை உணர வைக்கிறது. பதஞ்சலி ஆயுர்வேத் தொழிலை செழுமையாக்க ஒரு ‘ஃபக்கீர்’ (மத சந்நியாசி) தேவையில்லை. தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவது அவருக்குப் பழக்கமாகிவிட்டது.நாட்டைப் பிளவுபடுத்த பெரியார் கையாண்ட ஆரிய மாயை பொய் பிரசாரங்கள் மக்களிடம் என்றும் எடுபடாது என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!