அப்போல்லோவா??? அப்பால போ!

அப்போல்லோவா??? அப்பால போ!

நான்கு நாட்களாக motion போகாமல் அவதிப்பட்டு, மேலும் அவதிப்பட 73 வயதான ஒருவர் அப்போல்லோ ஹாஸ்பிடல் போனார். எனிமா குடுத்தும் முழுவதும் சுத்தம் செய்ய முடியாமல் போனதால், வாய் வழியாக டியூப் போட்டு உள்ளே சுத்தப்படுத்துவதற்காக ஒரே ஒரு நாள் அட்மிட் ஆனார். அவருக்கு பத்து வருஷமாக ஹைப்போநட்ரேமியா. அதாவது ஸோடியம் [உப்பு] குறைவதால் மிகவும் வீக்காகி, நினைவு தப்பும் குறை. அந்த சமயத்திலெல்லாம் நாட்ரைஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டதும் சரியாகிவிடும். அப்போலோவில் எனிமா குடுக்கும் படலத்தில் அவருடைய உப்பு சத்து குறைந்ததால், மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். அவருடைய மனைவி டாக்டரிடம், ஸோடியம் ஏற்றினால் சரியாகிவிடுவார் என்று சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், ICU வில் அட்மிட் பண்ணி, ஒருநாளில்லை இரண்டு நாளில்லை கிட்டத்தட்ட 45 நாட்கள் [ஒரு நாளைக்கு சுமார் Rs 30000 த்திலிருந்து 50000/- வரை ] அதிலேயும் வென்டிலேட்டரில் சுமார் 20 நாட்கள், அதிலும் CCU வில் கொஞ்ச நாட்கள் என்று அவரையும், குடும்பத்தாரையும் நொந்து நூலாக்கி விட்டார்கள் அப்போல்லோ அரக்கர்கள். தினமும் பேஷண்ட்டுக்கு போட வேண்டிய ஊசியைக் கூட, அவர்கள் கேட்கும் பணத்தை கட்டிய பின் தான் போடும் அவலம் !

அவசியமே இல்லாமல், ட்ரக்காஸ்ட்டமி என்ற ஆபரேஷனை தொண்டையில் பண்ணி, ஒரு குழாயைச் சொருகி விட்டு, “இனி இவருக்கு குரல் வரவே வராது; speech theraphy குடுத்தால் ஒரு வேளை குரலும், பேச்சும் வரலாம்” என்று குடும்பத்தை பயமுறுத்தி சில லக்ஷங்களைக் கறந்தார்கள். கடைசியாக தொண்டையில் சொருகி இருந்த டியூபை எடுத்தாலும் speech theraphy குடுக்காமல் அவரால் பேச முடியாது என்று சொல்லி, கையில் விதவிதமான டியூபுகளோடு வந்து, அவருக்கு ஏற்கனவே போட்டிருந்த டியூபை தொண்டையிலிருந்து எடுத்ததும், அவர் பேச ஆரம்பித்துவிட்டார்! அத்தனை நாள் இந்த டியூபால்தான் அவரால் பேச முடியவில்லை என்று அந்த அறிவாளிகளுக்கு யார் புரிய வைப்பது?

எல்லா “logist” டாக்டர்களும் அவரை ICUவில் வந்து பார்த்து, கிட்டத்தட்ட 12 ஸ்கேன்கள் [ஒவ்வொன்றும் Rs 12500/-] இதில் ஒரு ஸ்கேன் எடுக்க மற்றொரு அப்போல்லோவுக்குப் போக ஆகும் ஆம்புலன்ஸ் இத்யாதி [Rs 3000+] இவர்கள் தலையில். பல வகை டெஸ்ட்டுகள், கைகளிலும் கால்களிலும் மாத்தி மாத்தி ஊசியால் குத்தி, அவர் உடம்பை ரணகளமாக்கி, கடைசியில் ஹார்ட், கிட்னி, lungs, மற்ற எல்லாம் “Normal” என்று முத்திரை குத்தினார்கள். ஒவ்வொரு நாளும், “அவருக்கு எல்லாம் நார்மல்” என்பதை லக்ஷக்கணக்கில் செலவழித்து திரும்பத் திரும்ப எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் மூலம் சொல்ல ICU வுக்கு “விசிட்” செய்யும் 10-12 “….logist” களுக்கு விஸிடிங் fees குடுத்தே ஒழிந்து போனார்கள்.

அவருடைய மனைவி ஸோடியம் குறைவுதான் காரணம் என்று அத்தனை டாக்டர்களிடமும், நர்ஸ்ஸுகளிடமும் முட்டிக் கொண்டதை “எல்லாம் தெரிந்த மேதாவிகள்” அலட்சியம் பண்ணினார்கள். ஒருநாள் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டானதால், அவருடைய மகன் ஒரு டாக்டருக்கு போன் செய்து விவரத்தை சொல்லி, உதவி கேட்டதிற்கு அந்த டாக்டரின் பொறுப்பான பதில், “உனக்கு யார் இந்த நம்பரைக் குடுத்தது? மூளை இருக்கா உனக்கு? முதல்ல போனை வை!..” அந்த டாக்டர் நீடூழி வாழ்க!

சுமார் ஒண்ணரை மாதங்கள் அப்போலோவில் படுத்திய பாட்டில், அவர் மனைவி அவரை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று சொன்னதும், வீட்டில் வாட்டர் பெட், ஆக்ஸிஜன் இத்யாதி களுக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டபின் சொல்லுங்கள், டிஸ்சார்ஜ் செய்து விடுகிறோம் என்று பெருங்கருணை கொண்டு சொன்னதும், மற்றொரு நண்பர் சொன்னதன் பேரில், மாம்பலத்தில் உள்ள Public Health Centre க்கு அவரை கொண்டுபோய் அட்மிட் செய்தார்கள். அப்போலோவின் ஆம்புலன்ஸில் [தனியாக Rs 3000+] Public Health Centre வந்தார். எப்படி? மூக்கு, வாய்,தொண்டை, என்று உடல் முழுதும் டியூப் மயமாக அட்மிட் ஆனார்.

PHC யில் இருந்த டாக்டர் பாஸ்கர் உண்மையிலேயே அவரை மிக அழகாகக் கையாண்டார். அப்போல்லோ வின் “எல்லாம் நார்மல்” என்று கூறும் ஏகப்பட்ட ஸ்கேன், டெஸ்ட் ரிப்போர்ட்டு களை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, “எதுக்கு இத்தனை டியூப்? அவருக்கு ஒன்றுமே இல்லையே! என்று கூறி, மூக்கில் உள்ள டியூபைத் தவிர அத்தனையையும் எடுத்தார். ஒண்ணரை மாதங்களுக்குப் பின் நன்றாகத் தூங்கினார் அந்த முதியவர். அவர் மனைவியுந்தான்! PHC யில் நல்ல திறமை வாய்ந்த டாக்டர்கள், அன்பான, அனுபவசாலியான,ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையோடு பணி புரியும் திருமதி சாந்தா போன்ற நர்ஸ்களுடைய கவனிப்பால், பத்தே நாட்களில் எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டார்.

மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் அப்போலோ மாதிரியோ, மற்ற பெரிய ஹாஸ்பிடல்ஸ் மாதிரி hi-fiயாக இல்லாமல் இருக்கலாம். அப்போல்லோ மாதிரி “பெரிய” multi speciality ஹாஸ்பிடல் எல்லாம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கும் பெரிய மனிதர்களுக்கென்றே இருக்கட்டும். நடுத்தர வர்கத்துக்கும், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும், உண்மையில் உழைத்து உழைத்து சம்பாதிப்பவர்களுக்கும், பப்ளிக் ஹெல்த் சென்டர் மாதிரி நோயாளிகளின் மனநிலையை சரிவரப் புரிந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்த, காசு பிடுங்காத, தைரியமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய வகையில் பணிபுரியும் டாக்டர்களும், நர்ஸ்களும் நிச்சயம் இருக்கிறார்கள். பத்து நாட்கள் அங்கு ஆனா மொத்த செலவு Rs 12000/- only!!!

நன்றாக நடந்து வந்து ஆஸ்பத்ரிக்குள் வந்தவரை, ஒண்ணரை மாதம் கழித்து கிழிந்த நாராக ஆம்புலன்ஸில் PHC க்கு அனுப்பி வைத்த பெருமை அப்போலோவுக்கே! இதற்கு அவர்களுக்கு அழுத அநியாய fees சுமார் Rs 12 லக்ஷம்!! அப்போல்லோவில் கடைசியாகக் குடுத்த ரிப்போர்ட்டின் highlight என்னவென்றால்…..”நோயாளிக்கு ஹைப்போநட்ரிமியா..உப்பின் அளவு கவனிக்கப்பட்டது. குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..!!!”

இதைத்தானேய்யா நான் மொதல்லேர்ந்தே சொன்னேன்! அவர் குடும்பத்தார் அங்கலாய்ப்பு அப்போல்லோ காதில் விழுந்தாலும், நோ யூஸ்!

கஷ்டப்பட்டு சம்பாதித்து, சிறுக சிறுக சேர்த்ததை, எந்தவித பிரயோஜனமும் இல்லாமல், லக்ஷலக்ஷமாய் அப்போலோவில் கொண்டுபோய்க் கொட்டுவதை விட, வசதிக் குறைவான PHC மாதிரி ஹாஸ்பிடல்களுக்கு மனமாரக் குடுத்து வளமாக வாழ்வோம்

வாட்ஸ் அப் தகவல்

error: Content is protected !!