நாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்! – AanthaiReporter.Com

நாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்!

வரவிருக்கும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள பாதி -அதாவது கிட்டத்தட்ட 1.15 லட்சம் வங்கி .டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக் கும் அமைப்பு தெரிவித்து உள்ளது.இதனால் பெருமளவில் வேலையிழப்பு பிரச்சினை களுடன், நாட்டின் பொருளாதாரத்தில் நிதிச் சீரழிவை ஏற்படுத்தும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் ஏடிஎம்கள் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் ஏடிஎம்கள் வங்கிகளுக்குச் சொந்தமல்லாத, தற்காலிக இடங்களில் இயங்கி வருகின்றன. வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் மூலமாக, சுமார் 15,000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை விரைவில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது ஏடிஎம் தொழிற் துறை கூட்டமைப்பு (CAMi). 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும், இதனால் நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து பகுதிகளுமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவிகித ஏடிஎம்கள் இந்த நடவடிக்கையின் கீழ் மூடப்படுமாம்.

இது குறித்து ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டடை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்க வில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் மானியங்களைப் பெறுபவர்கள் ஏடிஎம்களின் மூலமாகப் பலன் பெற்று வந்தனர். இந்த நடவடிக்கையினால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவர். பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம்களில் வரிசையாக நின்ற நிலைமை, மீண்டும் நகரங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார் ஏடிஎம் தொழிற்துறை கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர்.