மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா?

மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட்  போஸ்ட் வேணுமா?

ராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ – திபெத் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற ஐந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரத்யேகமான பணிகளை செய்து வருகின்றன. இந்த படைகளில் காலியாக உள்ள, 398 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்: பி.எஸ்.எப்.,பில் 60, சி.ஆர்.பி.எப்.,பில் 179, சி.ஐ.எஸ்.எப்.,பில் 84, ஐ.டி.பி.பி.,யில் 46, எஸ்.எஸ்.பி., யில் 29ம் காலியி டங்கள் உள்ளன.

வயது: 2018 ஆக., 1 அடிப்படையில் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பல்வேறு நிலைகளைக் கொண்டதாக தேர்ச்சி முறை இருக்கும். இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற நிலைகள் இருக்கும்.

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 21.

விபரங்களுக்கு
:    ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!