கவர்மெண்ட் ஆர்ட் காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

கவர்மெண்ட் ஆர்ட் காலேஜ்களில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஜாப் ரெடி!

தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2018-19 ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. தொழில்நுட்ப பிரச்னையால், விண்ணப்பிக்கும் தேதியினை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்தது. தற்போது மீண்டும் புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களும் இந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். 55 சதவீத தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் பெற்று, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300, இதர பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையிலேயே செலுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பின் படி, தாவரவியல் (89), வேதியியல் (188), கணிணி அறிவியல் (137), ஆங்கிலம் (309), புள்ளியியல் (56), விலங்கியல் (100), புவியியல் (68), வரலாறு (67), வணிகவியல் (102), கணிதம் (192), தமிழ் (231), இயற்பியல்(150), பொருளாதாரம் (92), கல்வியியல் (28), எலெக்ட்ரானிக்ஸ் (26), கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ( 57), கார்ப்பரேட் கெக்ரட்ரிஷிப் (25), அரசியல் அறிவியல் (29) விஷூவல் கம்யூனிகேசன் (21), புவியியல் (68), ஜியாலஜி (21) உள்பட பல்வேறு துறைகளில் சுமார் 2331 பணியிடங்களுக்கான அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி https://www.tn.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்த பின் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.