பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு வருடமும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்படைகிறது. இப்பாதிப்பினால், சுமார் ரூ. 60000 நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பில், உயிர்ப் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதினால் இம்மாதிரியான இழப்பினை வெகுவாக குறைக்கலாம். பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை தாண்டும் போது மட்டும் பூச்சிக் கொல்லி உபயோகிக்கலாம். ஆனால், தேவைக்கு அதிகமாகவோ, அறிவியல் பூர்வமுல்லது உபயோகிப்பதினால், பூச்சிகளின் எதிர்ப்புத்திறன், பெருக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவுப் பாதுகாப்பில் அபாயம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்பது ஏற்கன்வே தெரிந்த தகவல்தான் என்றாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால், உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படும் தகவலை வெளியிட்டுள்ள, ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு, இவ்விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்  கொண்டுள்ளது.

அதிக பூச்சிக்கொல்லி உபயோகத்தினால், நீர், மண் மற்றும் காற்று மாசுப்படுவதோடு, பிற நன்மை தரும் உயிரினங்களான மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படைந்து பூச்சிகளின் பெருக்கம் உருவாகுதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகிய எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. மேலும் விவசாயிகளின் பயிர் உற்பத்திச் செலவினை அதிகரித்து வருமானமும் குறைக்கின்றது என்பதும் தெரிந்த விஷயம்தான்.

எனவே தூய்மையற்ற பகுதிகளை தூய்மையாக்குவது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாத காய்கறிகளை மட்டுமே வாங்குவது, என்பது உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மண்ணையும் அதன் வளத்தையும் பாதுகாக்கும் இந்த முயற்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும் என்றும், ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!