மிஸ் இந்தியா எலைட்2019: அபூர்வி சைனிக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை!

மிஸ் இந்தியா எலைட்2019: அபூர்வி சைனிக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை!

நம்ம சிங்காரச் சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா ” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக் கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா ” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார். இதை தவிர அவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

அதிலும் நடிப்பு , பாடல் , நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட  இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார். ரூபாறு மிஸ் இந்தியா எலைட் சாதனையை தொடர்ந்து இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் சாதிக்க தன்னுடைய துறையில் எப்போதும் பெரிய கனவுகளை காணுங்கள் என்கிறார். அதுமட்டுமின்றி மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இளம்பெண்களுக்காக மாடலிங் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார். அவரின் இந்த முயற்சியினால் சென்னையை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அவர் பார்வையில் தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.

என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்

சிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமை போன்றவை அவரை மிகவும் பாதித்தவை ஆகும். எனவே அவர் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் அதனால் NGO-வில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

’நாங்கள் Hind Towards Change என்ற நிறுவனத்தின் மூலம் இந்த சமூகத்திற்குஇணைந்து  ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனமானது மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் சமூகத்தின் மேல் உள்ள எண்ணத்தை மாற்றவும் உழைக்கிறோம். தனிமனித வளர்ச்சியையும் அவர்களின் விழிப்புணர்வும் கொண்டுவர முயற்சிக்கிறோம். நாங்கள் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்.

உதாரணமாக காஷ்மீர் வெள்ள நிவாரணம், கேரள வெல்ல நிவாரணம், Sanitary pads விழிப்புணர்வு, ரத்ததானம், குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை விதிகள் விழிப்புணர்வு மற்றும் ஏராளம். இதன் மூலம் ஒரு சுத்தமான வாழ்க்கை முறையும், உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வையும் கொண்டுவர முயற்சிக்கிறோம்’ என்று பெருமை பொங்கத் தெரிவிக்கிறார் அபூர்வி சைனி.

error: Content is protected !!