விந்து தானம் கொடுக்க உதவும் ஆப்ஸ்!

விந்து தானம் கொடுக்க உதவும் ஆப்ஸ்!

இப்பல்லாம் நம்ம நாட்டுலே அல்லது ஊரிலே கருமுட்டை தானம் மாதிரி, ஃபாரினிலே உயிரணு தானம் கொஞ்சம் கேஷூவலான விஷயம். மேரேஜ் செஞ்சுக்காம அல்லது ஹஸ்பெண்டுகிட்டே உள்ள குறைபாடுகளுக்காகவோ உயிரணு தானம் பெற்றுக் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்களின் எண்ணிக்கை ஃபாரீன்லே எகிறிக்கிட்டே போகுது. அதுக்காக தானம் கொடுக்கத் தயாராக உள்ளவர்களிடம் இருந்து டுபுக்குன்னு கேட்டுப் வாங்கி வச்சிகினு குழந்தை பெத்துக் கொள்கிற மாதிரியான சிம்பிள் சமாரச்சரமில்லையிது.

sperm sep 26

நாளைய உயிரை தானம் கொடுக்க வர்றவங்களோடன் குலம் கோத்திரம் முதல் அந்தம் வரை அப்டு டேட் ஜாதகத்தையே அலசி யோசிச்சு, ஸ்கின் , ஹேர் முதல் ஹைட் வரை பிடிச்சிருந்தால் மட்டுமே நெக்ஸ்ட் கெவலுக்குப் போவாங்க. இதுக்கிடையிலே லண்டன் ஸ்பெர்ம் பேங்க் டோனர்ஸ் என்கிற பெயரில் இந்த வேலையை சுலபமாக்க ஒரு ஆப்ஸ் கண்டுபிடிச்சிருக்து.

இதிலே உயிரணு தானம் செய்யக் காத்திருப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கலாம். எக்ஸாம்பிளா ‘கலகலப்பானவன்… எல்லோருக்கும் பிடித்தமானவன்… அன்பானவன்…. பெண்கள் விரும்பும் பர்சனாலிட்டி…” அபடி, இப்படி சுய பில்டப் கூட இருக்கும். இதெல்லாம் வேண்டாமுன்னா டாக்டர், இன்ஜினியர், பிசினஸ்மேன்…. என தனித்தனி கேட்டகிரியில் தேடலாம்.

தானம் பெற விரும்புறவங்க, இந்தத் தகவல்களுடன் தங்களது எதிர்பார்ப்புகளை மேட்ச் செய்து பார்த்து ஓ.கே என்றால் ஓகே சொல்லலாம். அப்பாலே குறிப்பிட்ட ஒரு தொகையை அதே ஆப்ஸ் மூலம் செலுத்தினால், உயிரணு சாம்பிளானது தானம் கேட்ட லேடி அல்லது கேர்ள் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிற ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பப்படும். அதுக்குப் பிறகுதான் அடுத்தக்கட்ட லெவலினான சிகிச்சைகள்…. அதிலும் இந்த சிகிச்சை இங்கிலாந்தின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பிரத்யேக மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது.

இது வந்த உடனே ‘ ஐயகோ.. மொபைல் மூலமே இனப்பெருக்கமா…? இது அப்பாக்களை அசிங்கப்படுத்துகிற செயலாச்சே’ என எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கக் தொடங்கியிருக்கின்றன. கூடவே ‘ச்சே.. ‘இதை அப்படியெல்லாம் பார்க்கப் படாதுன்னா படாது. பெண்கள் தங்களோட விருப்பத்துக்கேத்த குழந்தையை பெத்துக்க சூஸ் பண்ற சுதந்திரச் செயலாகப் பார்க்கலாமே…” அப்ப்டீன்னு பெண்ணிய ஆதரவுக் குரல்களும் கொஞ்சம் உரக்கவே ஒலிக்குது

error: Content is protected !!