தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

முன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் சுழலை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்பாட்டாக தொடங்கிய அன்று இன்று வரை விளங்கி வருவது அப்போலோ ஆஸ்பிட்டல்தான் என்றால் அது மிகையல்ல.

edit oct 15

தற்போது உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அளித்து வரும் அப்போலோவில் 60 ஆயிரம் செவிலியர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என்று ரியல் பிரமாண்ட சரவணா ஸ்டோர் டைப்பில் அடைந்த வளர்ச்சி எல்லாமே சினிமா டயலாக்கில் சொல்வதானல் ‘மெடிக்கல் மிராக்கிள்’தான். நேற்றைக்கு கிடைத்த ஸ்டேட்மெண்ட்படி வருஷத்திற்கு 3 லட்சத்து 70 ஆயிரம் உள்நோயாளிகளும் 33 லட்சம் வெளிநோயாளிகளும் அப்போலோ வந்து செல்கின்றனர். இந்த வருஷத்தில் மட்டும் 5,900 மூட்டு ,இடுப்பு அறுவை சிகிச்சைகளும், 14 ஆயிரம் நரம்பு அறுவை சிகிச்சையும், 400 கல்லீரல் மாற்றும், 1,100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 100 கோடி அதிகம். நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது அப்போலோ.

இத்தனைக்கும் டெய்லி 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த யங் மேன், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கப் போவதாக 33 வருடத்துக்கு முன்பு கூறியதைக் கேட்டு எல்லோரும் சிரிச்சாங்களாம். அதையெல்லாம் கேர் பண்ணாமல் சுமார் 150 படுக்கையுடன் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்னிக்கு 12 நாடுகளில் 69 ஹாஸ்பிடல்களையுயும் 9,500 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்யமாக வளர்ந்து இருப்பதில் தமிழக அரசியலும் அதனால் ஜனங்களிடையே ஏற்பட்ட ஹார்ட் பீட்டும்தான் காரணம் என்பதை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

ஆமாமுங்க.. படு சீரியஸா உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பல்வேறு அரசியல் தலைவர்கள், அப்போலோவில் அட்மிட் ஆவார்கள். அதையொட்டி நம்ம ஸ்டேட் பாலிடிக்ஸ்  மட்டுமில்லாமல அகில இந்திய அரசியலும் தலைகீழாக புரளும். அப்படிப்பட்ட சில ரிமைண்டர் ரிப்போர்ட் இதோ:..

எம்.ஜி.ஆர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கிய (1983 அக்டோபர்) அப்போலோ ஹாஸ்பிட்டலில் நெக்ஸ்ட் இயர் 1984 அக்டோபர் 5-ம் தேதி எம்.ஜி.ஆர் திடீரென அட்மிட் ஆகிறார். சி. எம்.எம்.ஜி.ஆரோட உடல்நிலை பற்றி ஹாஸ்பிட்டல் நிர்வாகம் அப்பப்போ சரியான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதில், “எம்.ஜி.ஆருக்கு சளித் தொந்தரவு இருந்தது. அதனால், காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்துமா தொந்தரவும் அவருக்கு இருக்கிறது. அதற்கு சிகிச்சை எடுக்க இங்கு சேர்ந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நியூஸை நாளிதழ்கள் மூலம் அறிந்து கொண்ட, தொண்டர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ஆஸ்பத்திரி எங்கே இருக்குன்னு தேடி வந்து காமபவுண்டை சுத்தி குவிஞ்சிட்டாங்க.

அதே சமயம் ‘அய்யே.. எம் ஜி ஆர் அம்புட்டுத்தான்’ என்று கிசு கிசுப்பாகச் சொல்லி அரசியல்லே எம்.ஜி.ஆரோட எதிரிங்க செஸ் விளையாடில் காய்களை நகர்த்துவது மாதிரி பிழைப்பு விளையாட்டு ஆட ஆரம்பித்தார்கள். தொண்டர்களிடம் ஏற்பட்ட சோர்வு… எதிரிகளுக்கு ஏற்பட்ட உற்சாகம் என அனைத்தையும் அப்சர்வ் பண்ணிக் கொண்டிருந்த, ஆர்.எம்.வீரப்பன், ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரத்தை தானாகவே எடுத்துக் கொண்டார். கொஞ்ச நாட்கள் தமிழக அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முதலமைச்சரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது” என்று ஸ்டீரியோ டைப்பில் இருந்தது.

இதேநிலை நீடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அக்டோபர் 14-ம் தேதி, அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆரின் மூளையில், ஒரு இடத்தில் ரத்தம் உறைந்துள்ளது” என்று அறிவித்தது. தகவலறிந்த பிரதமர் இந்திரா காந்தி, “எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவும்” என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 16-ம் தேதி எம்.ஜி.ஆரைப் பார்க்க சென்னை வந்தார். பிரதமர் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர் அப்போலோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க திரையுலகப் பிரமுகர்கள் வரிசைகட்டி வந்தனர். அன்றைய அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள், சட்டசபை நேரம் போக, மீதமிருந்த அத்தனை பொழுதுகளையும் அப்போலோவில் கழித்தனர்.

அதே சமயம் எம்.ஜி.ஆர் அப்போலோ மருத்துவமனையில் இருந்த 10 நாட்களுக்கும் மேலாக க்ரீம்ஸ் ரோட்டில் அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்திருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் அவரது தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனை அருகில் காத்துக்கிடந்தனர்.அத்துடன் அப்போது சட்டசபை நடந்து கொண்டிருந்ததால், தினந்தோறும் சட்டசபையில் எம்.ஜி.ஆர் உடல் நிலை குறித்து தகவல் சொல்லப்பட்டது. இந்த தகவல்களால் ஓரளவுக்கு தமிழகத்தில் அப்போது வதந்தி குறைச்சல்தான்

ரங்கராஜன் குமாரமங்கலம்

ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சியிலும் பிறகு பாரதிய ஜனதாவிலும் இருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ரங்கராஜன் குமாரமங்கலம் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார். இவர், கடந்த 2000-வது ஆண்டில், ஆர்டினரி காய்ச்சல் என்று இதே அப்போலோவில் ‘அட்மிட்’ ஆனார். அதன் பிறகு, காய்ச்சல் குணமடைஞ்சு போச்சு என்று டிஸ்சார்ஜாகி டெல்லி சென்றவர் கோமா நிலைக்குப் போயிட்டார். அவருடைய உடலில் பல உறுப்புகள் செயலிழந்தன. இதையடுத்து, அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், ரங்கராஜன் குமாரமங்கலம் ஃபேமிலி தங்கள் அதிருப்தி விமர்சனத்தை அப்போலோ மீது வைத்தனர். ஆனா நம்ம மீடியா + ஜனங்களுக்கே உரித்தான மன நிலையில் அந்த விவகாரம் மறைஞ்சே போச்சு. ஆனால், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அப்போலோ மருத்துவமனை சிகிச்சையும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும் தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பின.

முரசொலி மாறன்...

கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியான எக்ஸ் சென்ட்ரல் மினிஸ்டர் முரசொலி மாறன், 2002-ம் வருஷம் இறுதியில் அப்போலோவில் ஆஸ் யூசுவல் உடல்நலக் குறைவுக்கு அட்மிட் ஆனார். குணமடைஞ்சதா சொல்லி டிஸ்சார்ஜாகி, டெல்லி சென்ற அவர் 2003-ம் ஆண்டு மீண்டும் உடல் நலம் கடுமையாப் பாதிக்கப்பட்டு. வழக்கம் போல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு உடல்நிலை சீரடையவேவில்லை. இதற்கிடையில், முரசொலிமாறனின் உடல்நிலை குறித்து பேசிய கருணாநிதி, அப்போலோ மீது ஒரு விமர்சனம் வைத்தார். இந்நிலையில் முரசொலிமாறன், டெல்லியில் இருந்து, 2003 நவம்பர் 14-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில், ஹூஸ்டன் நகரில் இருக்கும் மெத்தோடிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 10 மாதங்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தும், உடல்நிலை சரியாகவில்லை. அதன்பிறகு, இந்தியா அழைத்து வரப்பட்டார். மீண்டும் அவரை இதே அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் கோமாவில் இருந்த மாறனை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 2003 செப்டம்பர் 13-ம் தேதி வந்து பார்த்தார். அத்துடன் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருத்தரா இதே அப்போலோவுக்கு வந்தனர். கூடவே கருணாநிதியும் டெய்லி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முரசொலி மாறனைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குவார். ஆனா அதே வருடம் நவம்பர் 23ம் தேதியன்று மாறன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

கருணாநிதி

கருணாநிதி சி எம்-மா இருந்த போது அவருக்கு அடிக்கடி முதுகு வலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தன. இதனால் 2008-ம் ஆண்டிலேயே போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பி இருந்தார். பின்னர், 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் மே 3-ம் தேதி திடீரென மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இதே அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களில் வீடு திரும்பினார். ஆனாலும் அதே 2011-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இரவு கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத் தொற்று இருப்பதால் சிறு நீர் கழிப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ஒன் டே தீவிர சிகிச்சைக்குப் பின்னர் 22-ம் தேதி இரவு வீடு திரும்பிட்டார்.

ஜெயலலிதா..

இப்போ சி. எம் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருக்கற அப்போலோ-வின் ல், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன. ‘அம்ம’அட்மிட் ஆன முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் இருக்கிறார். அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியின் அறை வாடகை பட்டியல் படி பார்த்தால், உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய். ஆனால் இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாக இருக்குமாம். அத்துடன் முதல்வர் தங்கி இருக்கும் அறையில் அதிகபட்ச வசதிகள் செய்யப்பட்டு இருப்பதால் அந்த அறையோட ஒன் டே கட்டணம் லட்சத்தை தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது போக அதே தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொது வார்டுக்கு, ரூம் ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது. முன்பு எம்.ஜி.ஆர் தங்கி சிகிச்சை பெற்றபோது, அந்த அறையின் கட்டணம் ரூ.525 தான் எனபது குறிப்பிடத்தக்கது..

அத்துடன் இதற்கு முன்பு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஒரு முறை அப்போலோ வந்து செல்ல 50 லட்ச ரூபாய் வரை வாங்கியதாகக் கூறுகின்றனர். ஆனா இங்கேயே தங்கி சிகிச்சை அளித்தால் அந்த தொகை மேலும் கூடும். முதல்வர் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவர்கள் இதுவரை 2 முறை வந்து இருக்கிறார்கள் . வெளி நாடுகளில் இருந்து அவங்க தங்களோட வசதிக்காக விலையுர்ந்த மருந்துகளையும் கொண்டு வந்ததாக கூறுகின்றனர். லண்டன் மருத்துவருக்கு முன்பு புகழ் பெற்ற இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றது. அதேபோல் வெளிநாட்டு மருத்துவர்கள், சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க, கன்சல்டிங் தொகையாக நிமிடத்திற்கு லட்சங்களில் வாங்குவது வழக்கம். முதல்வரின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறபட்டது. ஆறாம் தேதி அப்போலோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், தற்போது சிகிச்சை அளித்து வரும் இதய, சுவாச ,சர்க்கரை நோய் நிபுணர்கள். சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளது .இவர்கள் அனைவருமே உலகில் முதல் நிலை மருத்துவர்கள். இவர்களின் கட்டணங்கள் எல்லாம் ஜியோ மாதிரி இல்லாம ஏர் டெல் ரேஞ்சில் விநாடி, நிமிட கணக்கில்தான் தான் வாங்கப்படுமாம்

error: Content is protected !!