பொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி! – AanthaiReporter.Com

பொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!

அண்மையில் அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்திய போது சர்வதேச அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், 22 சதவீதம் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது என்றெல்லாம் தெரிய வந்திருந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என்று அதாவது தேர்வெழுதிய 1,13,298 மாணவர்களில் 36,179 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் பி.ஆர்க், கல்லூரிகளில், தன்னாட்சி கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுவதால், தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்தப் போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு, பிளஸ் 2 படிப்பை முடித்து, பொறியியல் (engineering) மற்றும் கட்டட வடிவமைப்பாளர் (architect) படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, நவம்பரில் முதல் பருவ தேர்வில் நடந்தது. அந்த முதல் பருவ தேர்வுக்கான முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜிவி உமா நேற்று (பிப்ரவரி 5)அறிவித்தார். அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டுமின்றி, மாணவர்களின் செல்பேசி எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. இந்தத் தேர்வு முடிவில்தான், கணிதத்தில், 43.67% மற்றும் இயற்பியலில், 52.77 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடல்சார் பொறியியல் வேதியியல் பாடத்தில் 71.59% மாணவர்களும், பொது வேதியியலில் 59.08% மாணவர்களும், ‘ப்ராப்ளம் சால்விங்’ பிரிவில், 61.7% மாணவர்களும், பொறியியல் கிராபிக்ஸ் 63.55% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதம் மற்றும் இயற்பியலில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்தப் பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேராசிரியர்கள், ‘பிளஸ் 2 வகுப்பில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க சிரமப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும். தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்முறை மாணவர்களின் செல்பேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து ஆறுதல் படுத்துவது தனி ரிப்போர்ட்