முடிச்சிட்டாருய்யா.. அன்னா ஹசாரே உண்னாவிரத்தத்தை முடிச்சிட்டார்!

முடிச்சிட்டாருய்யா.. அன்னா ஹசாரே உண்னாவிரத்தத்தை முடிச்சிட்டார்!

ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்காணிக்கவும் அவர்கள் ஊழல் செய்வதைத் தடுக்கவும் வலுவான லோக்பால் அமைக்க கோரி கடந்த ஒரு வார காலமாக் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே (80) நேற்று மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் நாடெங்கும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அவருக்கு பெரும் ஆதரவு அளித்தனர். அதை தொடர்ந்து ஜன் லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அன்றைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் காங்கிரஸ் அரசு ஜன்லோக்பால் அமைப்பை கொண்டுவரவில்லை.

அதன்பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பா.ஜ.க. உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜன் லோக்பால் அமைப்பை கொண்டு வரவில்லை. அதன் காரணமாக அன்னா ஹசாரே கடந்த மார்ச் 23ம் தேதி மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

அதேப்போல் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் விளை பொருட் களுக்கு சிறந்த விலையை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நேற்று அன்னா ஹசாரேவை சந்தித்து பேசினர்.

அவரது கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என உறுதியளித்தனர். அதை தொடர்ந்து தனது 6 நாள் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த இளநீரை பருகி தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

‘‘நான் அரசுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் அளிக்கிறேன்.’’

‘‘குறிப்பிட்ட காலத்திற்குள் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நிறைவேறாத பட்சத்தில் செப்டம்பர் மாதம் மீண்டும் உண்ணாவிரதத்தில் இறங்குவேன். அரசும் மக்களும் வேறு வேறு அல்ல. மக்களுக்கு சேவை புரிவதே அரசின் கடமை. அரசு தன் கடமையை சரிவர செய்ய போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது’’ என அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த உண்ணாவிரத்தால் அன்னா ஹசாரேவின் உடல் எடை 5 கிலோ குறைந்துள்ளதாக அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.

இதனிடையே அன்னா ஹசாரேவுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இருந்த போது ஒருவர் மேடை நோக்கி தன் ஷூவை விட்டெறிந்தார். அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!