மொபைலில் புதுப் படம், ஸ்பெஷல் ஃப்ளைட்- அடுத்தடுத்து அசத்தும் அமேசான்!

மொபைலில் புதுப் படம், ஸ்பெஷல் ஃப்ளைட்- அடுத்தடுத்து அசத்தும் அமேசான்!

இணைய வாணிகத்தில் பிரபலமானதும் அனைவரும் அறிந்ததுமான அமேசான் நிறுவனம் சரக்கு போக்குவரத்துக்கென தனியே வான்வழி சேவையை தொடங்கியுள்ளது. ஆம் முதல் முறையாக வான்வழி போக்குவரத்திற்கென தனியொரு விமானத்தையே அமேசான் உருவாக்கியுள்ளது.அந்நிறுவனம் இதற்கு பிரைம் ஏர் என பெயரிட்டுள்ளனர்.

amazon aug 7

சர்வதேச அளவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக சொன்னால் இந்தியாவில் பல மடங்கு அதன் விற்பனை உயர்ந்துள்ளது. இது பெருமிதம் அளிக்கிறது. அதிலும், அமேசான் வெப் சர்வீஸ் ஆரம்பித்ததில் இருந்து அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது. உலக அளவில் அமேசான் ஆன்லைன் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனை அதிகரித்தபடி உள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்து வரும் அமேசான் அடுத்தது சில திட்டங்களை இந்தியாவில் தீவிரமாக செயல்படுத்த உள்ளது. ஒன்று, சில முன்னணி மொபைல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு அமேசான் மூலம் விற்பனை செய்ய அனுமதிப்பது. இதை இப்போது செய்து வந்தாலும் மேலும் தீவிரப்படுத்த உள்ளது.

இரண்டாவது, ப்ரைம் வீடியோ; அமேசான் வெப்சைட்டில் ஒரு கணக்கை ஆரம்பித்து விட்டால் போதும், இன்டர்நெட் இணைப்பு இருக்கும் கம்ப்யூட்டர், மொபைல் எதிலும் புத்தம்புது படங்களை பார்க்கலாம். இந்த வீடியோவை காசு கொடுத்து வாங்கலாம்; வாடகைக்கும் எடுக்கலாம்.

இதனிடையே கடந்த ஆண்டில் அமேஸான் நிறுவனம் கையாண்ட பொருட்களின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருந்த நிலையில் திருவிழாக் காலத்தில் பல பொருட்கள் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படாததால் அமேசான் ரீஃபண்ட் (Refund) உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு உள்ளானது.இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தனி விமான சேவையை தொடங்கியுள்ளது. இதனால் ஆர்டர் செய்யும் பொருட்கள் தாமதமின்றி குறித்த நேரத்தில் சேர்க்கவும் முடியும் இது அமேசானின் இணைய வாணிகத்தின் ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=pqvyhKqMLtg&feature=youtu.be

Related Posts

error: Content is protected !!