அமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது! – AanthaiReporter.Com

அமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள அமேசான் விற்பனையின் Great Indian Sale வருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அமேசானின் தள்ளுபடி விற்பனையானது அந்நிறுவனத்தின் வணிகத்தை பல மடங்கு அதிகரிப்பது வாடிக்கை. அதனால் மேசானின் வாடிக்கையாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் கிரேட் இந்திய வெஸ்டிவல் சேல் இந்தாண்டும் வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளது.

ஆம்.. அமேசான் நிறுவனம் வழங்கும் Great Indian Sale வருகிற ஜனவரி 20-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நான்கு நாட்களுக்கான விற்பனைத் திரவிழாவில் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், கேமிரா எனப் பல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடி கள் இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

கூடுதலாக ஆன்லைனில் பணம் செலுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடியும் உள்ளது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர் களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி மதியம் 12 மணிக்கே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. அமேசான் ப்ரைம் இல்லாத வாடிக்கையாளர்களை விட 12 மணி நேரம் முன்னதாகவே தள்ளுபடி தொடங்குகிறது.

பஜாஜ் நிதிச்சேவை நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு அமேசான் no-cost EMI சலுகையை வழங்குகிறது. டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ்களுக்கு 50% வரையிலும் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட டெக் பொருட்களுக்கு 60% வரையிலும் தள்ளுபடி உள்ளது.