டெல்லி ரேடியோவில் வேலை ரெடி! – AanthaiReporter.Com

டெல்லி ரேடியோவில் வேலை ரெடி!

நம் நாட்டின் பொதுத்துறை சார்ந்த தகவல் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, 1997ல் நிறுவப்பட்டது. இது ரேடியோ, துார்தர்ஷன் போன்றவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை தயாரிப்பது மற்றும் ஒளிபரப்புவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. டெல்லி ரேடியோ அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், மானிடரிங் கம் கன்டென்ட் அசிஸ்டென்ட் பிரிவில் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஜேர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதே பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா மூலமாக டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியறிவு தேவைப்படும். கம்ப்யூட்டர் உபயோகிக்கும் திறனும், சோசியல் மீடியா குறித்த அனுபவமும் கூடுதலாகத் தேவைப்படும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என தெரிகிறது.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப்படிவத்துடன், ரெஸ்யூமை இணைத்து உரிய இதர இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Assistant Director (Programmes),Room No.403, New Broadcasting House, External Services Division, All India Radio, Parliament Street, New Delhi – 110001.

கடைசி நாள் : 2018 ஜூலை 31.

விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு