அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் நடிப்பில் `இமைக்கா நொடிகள்’ !

அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் நடிப்பில் `இமைக்கா நொடிகள்’ !

கோலிவுட்டில் ஹிட் அடித்த பேய் படமான ‘டிமான்டி காலனி’-யை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வரும் படம் – ’இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, இந்திப் பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கிறார். ரொமான்டிக் – த்ரில்லர் பாணியில் படு மாஸாக ரெடியாகி வரும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரைப் பார்க்கும்போது பலரும் கண் சிமிட்டவில்லை என்பதே ஹை லைட்…

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் நோக்கில் உருவாகி இப் படம் பற்றி அஜய் ஞானமுத்துவிடம் கேட்டபோது, “இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட படம். இதன் கதையை ஹீரோவை மையமாக வைத்தும் ஹீரோயினை மையமாக வைத்தும் எழுதிப் பார்த்தேன். ஆரம்பத்தில் இதில் பிரபுதேவா-வை பொருத்தி பார்த்த போது பர்பகெட்டாக இருந்தது. பின்னர் கொஞ்சம் யோசித்து கதையை ஹீரோயினுக்காக எழுதியபோது அழுத்தமாக இருப்பதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை தேர்ந்தெடுக்க நினைத்த போது. நயன்தாரா மட்டுமே பொருத்தமானவர் என்று முடிவு செய்தோம்.

அதே போல் இதில் வரும் சீரியல் கில்லர் கேரக்டருக்கு முதலில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசினோம். அவரும் நடிக்க சம்மதித்திருந்தார். ஆனால், அவரது பட இயக்க வேலைகளில் பிசியாகிவிட்டதால் வேறு நடிகரை தேடினோம். அப்போது முருகதாஸ் இயக்கிய இந்தி படமான, ’அகிரா’ டிரைலரைப் பார்த்தோம். அதில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பை பார்த்து அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தோம். ’ என்றார்.

’அது சரி.. நயன்தாரா- வை நடிக்க வைக்க என்ன டெக்னிக் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ’கதைக்கு அவர் தேவை என்பதால் அணுகி அவரிடம் சொன்ன கதையில் மயங்கிதான் நடிக்க சம்மதித்தார். சிபிஐ அதிகாரி கேரக்டரில் வருகிறார். அதற்க்காக ஃபைட் சீன் ஏதாச்சும் உண்டா? என்று கேட்டால் அது கிடையாது. எமோஷனல் காட்சிகளும் இருக்கிறது. மேலும் இதில் முக்கிய பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் அவர் கேரக்டர் ஒட்டு மொத்த படத்தையும் தாங்கிம் விதத்தில் அமைந்துள்ளதாக்கும். இன்னும் ஒரு ஷெட்யூல் பாகி உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன” என்றார் அஜய் ஞானமுத்து.

error: Content is protected !!