வாடிக்கையாளர்களை மிரட்டி காசு பார்க்கும் ஏர்டெல் & வோடபோன்! – AanthaiReporter.Com

வாடிக்கையாளர்களை மிரட்டி காசு பார்க்கும் ஏர்டெல் & வோடபோன்!

நம் நாட்டில் செல்போன் உபயோகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் அறிவோம். கிராமங்கள் வரை பிராட்பேண்ட் இணைப்பு உள்ளது. அதிலும் 120 கோடிக்கும் மேலான செல்போன் இணைப்புகள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. சிறிய பாட்டில் குளிர்பானத்தை விட ஒரு ஜிபி டேடா குறைவாக உள்ளது. இதனால் 73 கோடி முதல் 75 கோடி வாடிக்கையாளர்கள் ஒரு சிம் கார்டு மட்டுமே பயன்படுத்தினாலும். மீதமுள்ள எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவது அதிகம். இப்படி டூயல் சிம் வசதி உள்ளோரில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் பயன்படுத்துகின்றனர். அதுவும் இன்கம்மிங் வசதிக் காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கை யாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

காரணம் இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும், மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருது கின்றன. இதையொட்டி முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே.

இதன்படி ஏர்டெல் நிறுவனம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் என்ற திட்டத்தை குறைந்தபட்சமாக வைத்துள்ளது. ஆனால், சுமார் 100 மில்லியன் சந்தாதாரர்கள் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யாமல் சராசரியாக வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,200 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 2,100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவின் தற்போதைய நிலைமை:

முன்பு வோடபோனும் ஐடியாவும் தனித்தனி நிறுவனங்களாக இருந்தன. ஆனால், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது இரண்டு நிறுவனங்களும் கை கோர்த்து உள்ளது. ஏர்டெலை விட வோடபோன் ஐடியா நிறுவனத்தில் தான் ரீசார்ஜே செய்யாத வாடிக்கை யாளர்கள் அதிகம். இதற்கும் மாதம் 35 ரூபாய் திட்டத்திலிருந்து ரீசார்ஜ் தொடங்குகிறது. ஆனால், சுமார் 150 மில்லியன் வாடிக்கையாளரகள் 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் உள்ளனர். சரா சரியாக 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,800 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 3,144 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

ஆனால் இதை டிராய் அனுமதிக்கக் கூடாது என்றும் இந்த போக்கு ஒரு வகையில் மிரட்டல் என்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்