அக்டோபர் 2 முதல் ரயில் & விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

அக்டோபர் 2 முதல் ரயில் & விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. சில மாநிலங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று, பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், திரு. அஷ்வானி லோஹனி கூறும்போது, வரும் அக்‍டோபர் 2 ஆம் தேதி முதல், ஏர் இந்தியா விமானங்களில், பிளாஸ்டிக் ‍பொருட்களைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என்றும், எரிபொருள் வினி‍யோகப் பிரச்‌சனை, விரைவில் தீர்க்கப்படும் என் தெரிவித்தார்.

விமானங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக இனி பேப்பர் கப்களும், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் டம்ளர்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று ரயில் மற்றும் ரயில் நிலையங்களில், அக்‍டோபர் 2 ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த, ரயில்வே நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!