அதிமுக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் – அரசியல் களம் சும்மா அதிருதில்லே!

அதிமுக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் –  அரசியல் களம் சும்மா அதிருதில்லே!

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 529 பேரூராட்சகள், 31 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துத்துக்கள் என மொத்தம் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

admk sep 26

உள்ளாட்சித் தேர்தல் என்பது, தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரம் வரை நடைபெறக்கூடியது கிராமப் பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இருக்காது. மீதியுள்ள பொறுப்புகளுக்கு மாநகராட்சி கவுன்சிலர் வரை அந்தந்தக் கட்சியினருக்கு அங்கிகரிக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தல் களத்தில் கட்சி சார்ப்பற்றவர்களும், கட்சி சார்புள்ளவர்களும் இருப்பார்கள். மாநில அரசுக்கு செல்வாக்கு இருப்பது போல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர்களுக்கும் அதிகாரம் இருப்பதால் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்துக்கு தமிழகத்திலிருந்து 30 உறுப்பினர்களும், சட்டப்பேரவைக்கு 234 உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 58 அரசு பதவிகள் உள்ளன. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி மட்டுமல்ல ஒரு சிறிய தேர்தல் போர் ஏற்படும்

இந்தத் தேர்தலில் 2.88 கோடி ஆண்கள், 2.92 கோடி பெண்கள், 4,584 இதர வாக்காளர்கள் என 5.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் செலவுக்கான நிதி ரூ.182 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி தமிழக அரசு அறிவித்தது. அதில் இதுவரை ரூ.107.69 கோடி நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த நான்கு தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவித்து ஆச்சரியத்தை ஆனந்தத்தையும் அளித்துள்ளார்.

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்,

சென்னை மேயர் சைதை துரைசாமி, வேலூர் மேயர் கார்த்திகாயிணி, நெல்லை மேயர் புவனேஸ்வரி, திண்டுக்கல் மேயர் மருதுராஜ், தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி மேயர் ஜெயா, சேலம் மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!