டாக்டராகிய பிறகு ஆக்டர் ஆக தயாரான ஷிவானி – Dr. ராஜசேகர் – ஜீவிதாவின் மகள்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு “ இது தாண்டா போலீஸ் “ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் Dr. ராஜ சேகர் மற்றும் “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி ராஜசேகர் ஆவார் . ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்த திடீர் எண்ட்ரி குறித்து அவரிடம் கேட்ட போது, “அப்பாவும் , அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும் , நடிப்பு பற்றியும் சின்ன வயதில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கு. சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம் , குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கீ போர்ட் , கிடார் , வீணை ஆகியவற்றை நன்றாக வாசிப்பேன். நானும் தங்கை ஷிவாத்மிகாவும் யூடியுப் பார்த்து பாடி கொண்டே இருப்போம் இது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. நானும் தங்கையும் கிக் பாக்சிங் படித்து வருகிறோம். எனக்கு பிட்னஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அது எனக்கு ஒரு அடிக்சன் மாதிரி.

நான் பொறந்தது மட்டும் தான் தமிழ் நாடு வளர்ந்தது ஹைதராபாத்தில் தான். உறவினர்கள் அனைவரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசும் போது தமிழில் தான் பேசுவோம். நான் 3வது வருடம் மருத்துவம் படித்து வருகிறேன். நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன். விஷாலை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும். அப்பா தான் என்னுடைய ஆல் டைம் ஹீரோ , அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம்” என்கிறார் ஷிவானி.

மேலும் பேசிய அவர் “அப்பாவும் அம்மாவும் சினிமா ஃபீல்டை சேர்ந்தவங்க அப்டிங்கிறதால என்னோட ஸ்கூல் டேஸிலிருந்தே சினிமா பத்தின, நடிப்பு பத்தின அறிமுகம் உண்டு.கூடவே, சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சிபிடியெல்லாம் முறைப்படி போன்ற நடன கத்துக்க ஆரம்பிச்சேன். மியூஸிக்லேயும் ஆர்வம் அதிகம்! வீணை, கீ போர்ட், கிடார்லாம் நல்லா வாசிப்பேன்.நானும் என் தங்கை ஷிவாத்மிகாவும் ‘யூ டியுப்’ பார்த்து ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்போம். எங்க ரெண்டு பேரோட பெரிய ஹாபின்னா அது பாடுறதுதான்!” என தன்னைப் பற்றி பில்ட் அப் கொடுக்கும் ஷிவானி தங்கையோடு சேர்ந்து கிக் பாக்ஸிங்கும் கற்று வருகிறாராம்!

”கலையுலக வாரிசுங்கிறதால நடிப்பு, இசையார்வம்லாம் சரி. ‘கிக் பாக்ஸிங்’ ஆர்வம் எப்படி வந்துச்சு?” என்று கேட்டால்,

“நான் ஒரு பிட்னஸ் அடிக்டுங்க” என ஒற்றை வரியில் பதில் தருகிறார்.

பிறந்தது மட்டும்தான் தமிழ்நாடு. வளர்ந்தெல்லாம் ஹைதராபாத்தில். என்றாலும் நன்றாக தமிழ் பேச வருகிறது.

அது பற்றி கேட்டால், “எங்க ரிலேஷன்ஸ் நிறையப் பேர் சென்னையில் தான் இருக்காங்க. அவங்களோட தமிழ்லதான் பேசுவோம். அதுதான் காரணம்” என்கிற ஷிவானி தனுஷை மிகவும் பிடித்த ஹீரோ என சொல்வதோடு ‘3’ படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து அழுதேன் என்றும் போனஸ் தகவல் தருகிறார்.

“தனுஷை தவிர யாரை பிடிக்கும்” என்பது நம் அடுத்த கேள்வி

“விஷாலையும் ரொம்ப பிடிக்கும் மேன்லியா இருப்பார். அவர் எங்க ஃபேமிலி ஃபிரெண்டும்கூட. விஜய் சேதுபதியையும் பிடிக்கும். எத்தனை ஹீரோ இருந்தாலும் அப்பா தான் என்னுடைய ஆல் டைம் ஹீரோ!:”என்று மறுபடியும் கெத்தாக சொல்லி முடிக்கிறார்.