மருந்துகள் பற்றி மிகைப்படுத்தி விளம்பரம் வெளியிடும் சேனல்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!

மருந்துகள் பற்றி மிகைப்படுத்தி விளம்பரம் வெளியிடும் சேனல்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் முயற்சியால் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு, உலகம் முழுவ தும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்திய பாரம்பரிய மருத்துவக் கலைகளில் ஒன்றான ஆயுர்வேதத்துக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில், அக்டோபர் 28-ம் தேதி தன்வந்திரி பிறந்தநாளை தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆயுர்வேதம் என்பது ஆயுர் வேதா என்னும் சமஸ்கிருத சொல் லின் தமிழாக்கம். இவை வேத காலங்களில் தோன்றியவை. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்ற இரு நூல்களும் அன்று இருந்த முக்கிய மருத்துவ நூல் கள். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி, மருந்துகள் மற்றும் உடல், மன நலனுக்கு அதிபதி. ஆயுர்வேத மருத்துவத்தில் அவரது பங்களிப்பு மிக அதிகம். இதனாலேயே ஒவ்வொருஆண்டும் தன்வந்திரி பிறந்தநாள், ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்வலர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இதனிடையே மருந்துகளின் பலன் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இயக்குநர் அமித் கேடோச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தொலைக்காட்சி சேனல் களில் ஆயுர்வேத மருந்துகள் என்ற பெயரில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விளம் பரங்கள் வெளியிடப்படுகின்றன. இதனால் மக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் எங்களிடம் புகார் அளித்துள்ளது. மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. எனவே ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருந்துகள் தொடர்பாக பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட, விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பாபா ராம்தேவின் ’பதஞ்சலி நிறுவன பொருள்கள் உட்பட அனைத்து ஆயுர்வேத பொருள்களும் 100% ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம். அந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ், ஷிவிங்கி பீஜ் உள்ளிட்ட 32 பொருள்கள் தரமற்றவை என்பது தெரிய வந்ததும். இந்த பொருள்களில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருக்கிறது என்பதுடன் மேற்கு வங்க பொது சுகாதார ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஒரு தரப் பரிசோதனையில் பதஞ்சலி ஆம்லா ஜூஸ் தோல்வியடைந்ததால் அங்குள்ள ஆயுதப்படையின் ’Canteen Stores Department’ இல் அதற்கு தடை விதிக்கப்பட்டது’என்று ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கடந்த ஆண்டு ஜூலையில் சர்க்கரை நோயாளிகளுக்காக சந்தையில் ஓர் ஆயுர்வேத மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான விளம்பரம் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பானது. அந்த விளம்பரத்தின் நம்ப கத்தன்மை குறித்து பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்ததால் விளம்பர ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பாத் நாயக், மக்களவையில் அண்மையில் பேசியபோது, ஆயுர்வேத மருந்துகள் தொடர்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடை செய்ய இந்திய விளம்பர தர கவுன்சில் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த கவுன்சில், பத்திரிகை, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் போலி ஆயுர்வேத மருந்து விளம்பரங்கள் குறித்து கண்காணித்து தகவல் அளிக்கும். அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று உறுதி அளித்திருந்ததும் நினைவுகூறத்தக்கது..

Related Posts

error: Content is protected !!