தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

தமிழக ஆவின் மதுரை மையத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ் நாட்டில் ஆவின் 1981ல் நிறுவப்பட்டது. இது அரசுத்துறை சார்ந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் சிறப்பு பெற்றது. இதன் மதுரை மையத்தில் தற்போது காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஆபிஸ் எக்சிகியூடிவ் பிரிவில் 2ம், சீனியர் பேக்டரி அசிஸ்டென்ட் பிரிவில் 25ம் சேர்த்து மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஆபிஸ் எக்சிகியூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், முதுநிலைப் பட்டப் படிப்பு டன், கோஆபரேடிவ் டிரெய்னிங்கில் டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும். பேக்டரி அசிஸ்டென்ட் பதவிக்கு, பிளஸ் 2 அளவிலான படிப்பு அல்லது ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager, Madurai District Cooperative Milk Producers Union Ltd, Sathamangalam, Madurai- 20.

கடைசி நாள் : 2018 மே 9.

விபரங்களுக்கு :  ஆந்தை ரிப்போர்ட்டர்