ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆவின் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: டெக்னீசியன் பிரிவிலான எலக்ட்ரிகலில் 6, ஆப்பரேஷனில் 3, ரெப்ரிஜிரேஷனில் 2, பாய்லரில் 1ம் சேர்த்து மொத்தம் 12 இடங்கள் உள்ளன.

வயது: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பாய்லர் தவிர்த்து இதர பதவிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவு ஒன்றில் முடித்திருக்க வேண்டும். பாய்லர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சியுடன் கிரேடு 2 அல்லது கிரேடு 3 அளவிலான பாய்லர் அட்டென்டண்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் இருக்கும்.

விண்ணப்பிக்க:
 விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager,

Madurai District Cooperative Milk Producers’ Union Ltd,

Sathamangalam,

Madurai-625 020”

கடைசி நாள்
 : 2019 ஜூலை 15.

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு