ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர் – AanthaiReporter.Com

ஜனவரி -2017க்கு பிறகு ஆதார் அட்டை மூலமே வங்கி பணபரிவர்த்தனை_ ஆர்பிஐ நியூ ஆர்டர்

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் காரணமாக வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கின. பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும், போதிய அளவுக்கு விநியோகிக்கப்படாத காரணத்தினால், வங்கிகள் முன்பாக நிற்கும் பொதுமக்களின் கூட்டம் இதுவரை குறையவில்லை.

bank dec 2

இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2017 ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் பரிவர்த்தனைக்கு எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய எண், பயோ மெட்ரிக் அடையாளம் ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வைத்து இருக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அத்ற்கிடையில் பணப் புழக்கம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை கூறும்போது, “நவம்பர் 8-ம் தேதி முன் வரை நாட்டில் புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளின் அளவில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இருக்காது. அதற்கு மாற்றான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இதனால் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத் தட்டுப்பாட்டு பிரச்சினை நீங்கி இயல்பு நிலை திரும்பும்.கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை கறுப்புப் பணம் பாழாக்கி வந்தது. அதை முறியடிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் அரசியல் நிதி ஆதாரங்கள் அனைத்தும் இனி வெளிப்படையாக நடக்கும்” என்றார் அவர்.

இதுதொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி  நேற்று மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், கூறியிருப்பதாவது: ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைக்கான வசதியுடைய இயந்திரங்களின் சப்ளை போதிய அளவு வரவில்லை. இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட ஆதார் மூலமான வங்கி பரிவர்த்தனைகளுக்கு கெடு தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகள் நெட்வொர்க் மற்றும் இதுவரை பெறப்பட்டுள்ள இயந்திரங்களில் தேவையான மாறுதல்கள் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.