நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா கோல்மால்கள் அம்பலம்!- By கோடங்கி

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா கோல்மால்கள் அம்பலம்!- By கோடங்கி

வரலாற்றுப் பெருமைகள் எக்கச்சக்கமாக கொண்டது நடிகர் சங்கம் . இதில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும்,ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த ,பகுதி சார்ந்த தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்டன. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது குறித்து அவ்வப்போது சர்ச்சையும், வாய் மொழி தீர்ப்பும் ஏற்பட்டு அடங்குவது வாடிக்கைதான்.

nadigar sangam apr 2

ஆனால் தற்போது அச்சங்கம் குறித்து வெளி வந்துள்ள சர்ச்சையும், புகாரும் பகீர் ரகமாக இருக்கிறது. அதாவது நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணறு வெட்ட கடன் கேட்டு அலைவார். கடைசியாக கடன் கிடைக்கும் ஆனால் அதற்கு அவர் கொடுத்த லஞ்சம் அதிகம். கடுப்பான வடிவேலு கிணறு வெட்டியதாக, அதை பார்த்து உறுதி செய்த ரசீதை வைத்து கிணத்தை காணோம்னு புகார் அளிப்பார். இந்த காமெடியில் மிகப்பெரிய உண்மையை சொல்லியிருப்பார் இல்லையா?. இதே போல ஒரு உண்மை நடிகர் சங்கம் கட்ட உள்ள புதிய கட்டட வரைபடத்திலும் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் அங்குள்ள குடியிருப்பு மக்கள்.

அதாவது இப்போது உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக 33 அடி அகல சாலை இருந்துள்ளது. எம்ஜிஆர், சிவாஜிகணேசன் போன்ற ரசிகர்கள் அதிகம் இருக்கும் நடிகர்கள் நடிகர் சங்கம் வரும் போது ஒரு வழியாக வந்து இன்னொரு வழியாக வெளியே செல்வது வழக்கம். பிரகாசம் சாலையில் உள்ளே நுழைந்தால் அபிபுல்லா சாலையில் வெளியேறும் அந்த சாலையில் முக்கியஸ்தர்களின் வசதிக்காக எப்போதும் தடுப்பு வைக்கப்பட்டிருக்கும். காலப் போக்கில் அந்த தடுப்பு வைத்த பாதை முற்றிலும் அடைக்கப்பட்டது. நடிகர், நடிகைகளின் கார்கள் நிறுத்துமிடமானது.

பின்னர் சுவர் எழுப்பி சாலை மறிக்கப்பட்டது. அப்போது இது குறித்து குடியிருப்போர் சங்கம் சார்பில் பல புகார்கள் அரசுக்கு அனுப்பி வைத்தும் எந்த பலனும் இல்லை. இதற்கிடையில் நடிகர் சங்க கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட சரத் குமார், ராதாரவி நிர்வாகம் முயற்சிகள் எடுத்த போது குடியிருப்போர் சங்கம் நீதிமன்றம் போனது. இந்த நிலையில் சமீபத்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான டீம் நடிகர் சங்க கட்டட விவகாரத்தை பெரிதாக்கி சரத் ராதாரவி நிர்வாகம் மீது குற்றம் சாட்டி தேர்தலில் வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியது.

இப்போது விஷால் தலைமையிலான டீம் 26 கோடி செலவில் பிரமாண்டமான கட்டடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது. இப்போது அதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பொது மக்களின் பயன்பாட்டுக்கு அரசு உருவாக்கிய 33 அடி சாலையையும் சேர்த்தே புதிய கட்டடத்திற்கு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி தரக்கூடாது என்று குடியிருப்போர் சங்கம் புகார் எழுப்பி உள்ளது. இதற்கு ஆதாரமாக அந்த பகுதியின் நில அளவு வரைபடம், சாலை வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரால் பிரமாண்டமான முறையில் பப்ளிசிட்டி செய்து ரஜினி, கமல் சேர்ந்து அடிக்கல் நாட்டிய நடிகர் சங்க புதிய கட்டிடம் உருவாவதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரித்த போது, “தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு முன் எப்படியாவது நடிகர் சங்கத்தின் கட்டிட விழாவை நடத்திய ஆக வேண்டும் என்ற அவரின் ஆணவத்தினால் தற்போது என்ன செய்தார் தெரியுமா. நடிகர் சங்க பணத்தை இரண்டரை கோடியை CMDA APPROVAL வாங்க கொடுத்துள்ளதாக தகவல். இந்த செயல் நடிகர் சங்க நிர்வாகிகளையே கலங்கடிக்க செய்துள்ளது. ஏனென்றால் இந்த CMDA க்கு இவ்வளவு பெரிய தொகை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.கொஞ்சம் பொறுமையாக இருத்து இருந்தால் இந்த APPROVED தானாகவே கிடைத்து இருக்கும்.

ஆனால் இவரின் அவசரத்தினால் நடிகர் சங்க நிதியிலிருந்து இவ்வளவு பணம் கொடுத்து இருப்பது சக நிர்வாகிகளை வருத்தமடைய செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதே மாதிரி சரத்குமார் செய்தார் என் அவர் மேல் குற்றம் சாட்டியே விஷாலே இது போல செய்வது நியாயமா என கேள்வியும் அனைவரின் மனதிலும் எழுகிறது.

அதுக்கிடையில் இந்த விழாவிற்கு அமிதாப்பச்சன் உட்பட பாலிவுட், டோலிவுட், மாலிவுட்டிலுள்ள பல மூத்த நடிகர்களை வர வைத்திருக்க வேண்டும்.முறைப்படி எல்லா நடிகர்களும் விழாவுக்கு கலந்து கொள்ள முன்கூட்டியே பேசி இருக்க வேண்டும். ஆனால் கமல், ரஜினிக்கு மட்டும் பல்வேறு தூது விட்டு விழாவுக்கு வரவழைத்த நடத்தி முடித்ததன் மூலம் மற்ற மொழி கலைஞர்களை அவமானப்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார்கள்.

nadigar sangam apr 2. b

ஆக, இந்த நடிகர் சங்க புதிய கட்டட விவகாரம் , அடிக்கல் நாட்டு விழா பல பொய்களை உள்ளடக்கி பலருக்கு தவறான தகவல்களை கொடுத்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த விழாவாக மாறியிருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழா இத்தனை அவசர அவசரமாக நடத்தப்படுவதே தயாரிப்பாளர் சங்க தேர்தலை முன்னிறுத்தி தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்கள் என்றும் அறிவிகப்பட்டது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது..

அதே போல் இருவரும் இணைந்து செங்கல் எடுத்து வைத்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள். ஆனால் இந்த விழாவுக்கு போக வேண்டாம் என்று ரஜினிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கமல் உட்பட பலரும் கேட்டுக் கொண்டதால் ரஜினி கலந்து கொண்டார். அப்படியான அடிக்கல் நாட்டு விழா முடிந்து 24 மணி நேரம் முடிந்த நிலையில் பொது மக்களின் சாலையை ஆக்ரமித்து கட்டட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற புகார் ஆதாரத்தோடு வெளியாகி உள்ளது.

இது தெரிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் கடும் அப்செட் ஆகியிருக்கிறார். அவருக்கு தகவல் சொல்லும் போது முறையாக அனுமதி வாங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். ரோடு ஆக்ரமித்த விவகாரத்தை ரஜினியிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள்.
விழாவில் பங்கேற்க ரஜினியிடம் பலமுறை பேசிய கமல் இந்த விவகாரங்களை ஏன் சொல்லாமல் மறைத்தார். அல்லது கமலுக்கே சொல்லாமல் நாசர், விஷால் நிர்வாகம் மறைத்து விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

இது குறித்து சங்க டிரஸ்டியான எஸ்.வி.சேகர் பல முறை கேள்வி எழுப்பி மெயில் அனுப்பியும் நாசர் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி நாசர் பிறந்த நாளில் நாசர், நடிகர் ரித்திஷ் ஆகியோரை கவுரவப் படுத்தும் விதமாக 9 செங்கல் வைத்து நடிகர் சங்க கட்டட பூமி பூஜை போடப்பட்டது.

ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடத்திற்கு இரண்டாம் முறையாக ரஜினி கமல் கையால் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இதில் யாரை ஏமாற்றி யாரை பலிகடாவாக்கி இருக்கிறார்கள் என்பது விளையாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக் கோனே காரியத்தில் கண் வைய்யடா தாண்டவக் கோனே அப்படீன்னு சும்மாவா சொன்னாங்க…!

கோடங்கி

error: Content is protected !!