இந்திய பெண் வக்கீல் அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியானார்!

இந்திய பெண் வக்கீல் அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியானார்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா தல்வானி என்ற பெண் சட்ட நிபுணரை மாசாசூசட்ஸ் மாவட்ட நீதிபதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்கா பாஸ்டன் நகரில் வக்கீலாக பணியாற்றி வந்த இந்திரா தல்வானி, மாகாண நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளில் வாதாடி வந்தார். கடந்த 1988ல் கலிபோர்னியா பல்கலையில் சட்டம் பயின்ற இவர் பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். தற்போது மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
sep 26 - lady judge
இதுகுறித்து ஒபாமா கூறுகையில், ‘நீதித்துறையில் உள்ளவர்கள் நியாய உணர்வுடன், திறமையானவராகவும் இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் அந்த தகுதிகளை பெற்றுள்ளார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வின்ஸ் சாப்ரியா என்பவர் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிபதியாகவும், மனிஷ் ஷா என்பவர் இலினாய்ஸ் வடக்கு மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். இருவரும் செனட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மூன்றாவது பெண் நீதிபதியாக இந்திரா தல்வானி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு விரைவில் சென்ட் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

Obama nominates Indian-American woman as district court judge
*************************************************************
US President Barack Obama has nominated yet another Indian-American, Indira Talwani, to the key post of US District Court judge in Massachusetts. Talwani is the third South Asian nominee by Obama, after Vince Chhabria and Manish Shah, both awaiting confirmation. Once confirmed, she would be the first South Asian justice in the First Circuit.

error: Content is protected !!