10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு

10 படித்தவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூரில் பியூன் பணி வாய்ப்பு

திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (SBT) வங்கியில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி
: Peons

மொத்த காலியிடங்கள்: 1030. இதில் தமிழகத்திற்கு 121, பாண்டிச்சேர்க்கு 03 அடங்கும்.

சம்பளம்: ரூ.5,850 – 11,350
sep 26 - vazhikatti s b t
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 மற்றும் டிகிரி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2013

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை. பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் சென்னை தேர்வு மையத்திற்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை SBT வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்தவும். இதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்களுக்கு ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.statebankoftravancore.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankoftravancore.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts

error: Content is protected !!