கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தைத் தடுக்க அவசர சட்டம்?

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவி இழப்பதை தடுக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அதிரடியாக உத்தரவிட்டது. தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவி உடனடியாகப் பறிபோகும் நிலை உருவானது. இதை தவிர்ப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தது. இது மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
sep 24 - convict m p
இதனிடையே ஊழல் வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி ரஷீத் மசூதீன் குற்றத்தை சி.பி.ஐ நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் உடனடியாக எம்.பி பதவியை இழக்க நேரிடும். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில் வரும் 30ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

எனவே, இவற்றை தடுக்கும் வகையில் அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் 3 மாதங்கள் உள்ளன. எனவே எம்.பி. எம்.எல்.ஏக்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதை தடுக்க குடியரசுத் தலைவர் மூலம் அவசர சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Government to bring ordinance to protect tainted MPs and MLAs
*******************************************************************************
The government is likely to consider on Tuesday an ordinance to protect convicted MPs and MLAs from facing immediate disqualification, after having failed to get a Bill to this effect passed in Parliament.With Parliament not being able to pass a law to negate a Supreme Court verdict, lawmakers convicted in criminal cases with imprisonment of two years or more face the prospect of immediate disqualification.

Related Posts

error: Content is protected !!