சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!

சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!

இது ஒரு சைகோலாஜிகள் காதல் , ஆக்சன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொல்வது. இது அம்மா செண்டிமெண்ட் உள்ள படம் ஆனால் எந்த வித தாயை ஆதரிக்கும் கவிதையோ பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய் பாசங்களை வெளிபடுத்தும் ஒரூ படம். தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள் உலக அரசாங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தபடுத்தி கருத்து சொல்லும் படம். ஒரு மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ்மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம் பிரகாமியம். இது ஒரு கலை படம் + ஆவன படம் + கமர்ஷியல் படம் , அப்படியாக மூன்று வகையான கதை சொல்லும் யுத்திகளின் கலவையாக உருவகியுள்ள இப்படம் படம் Art – doccial படமாக உருவாகி உள்ளது .

cine jan 10a

இதில் ரோப் காட்சிகள் , கார் சேஸ் போன்ற ஆக்சன் காட்சிகள் இல்லாத ஒரு Psychological action thriller movie. எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ இல்லாத படம் இது. ஆனால் படத்திற்கு சென்சாரில் “A” சான்றிதழ் கொடுத்தற்க்கான காரணமாக இயக்குநருக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் “இப்படம் அதிக தாக்கத்தை உளவியல் ரீதியாக திரைக்கதை மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதற்காக” என்பது தான். வருகிற ஜனவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை பிரதாப் இயக்கி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

cine jan 10 b

படம் : பிரகாமியம் ( தமிழ் )
இயக்குநர் : பிரதாப்
ஒளிப்பதிவு : P.முத்துப் பாண்டியன்
எடிட்டிங் : கார்த்திக் மனோரமா
இசை : ராஜ்
தாயாரிப்பு : K. சுமித்ரா
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை : N.A. நாதன்
தயாரிப்பு நிர்வாகம் : தென்னிந்திய நடிகர் சங்க நயமான செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன்

Synopsis : பிரகாமியம் – இது அடிப்படையில் உளவியலை அடிப்படையாக கொண்ட படம். சமூகத்தில் உள்ள அடிப்படை சிக்கல்களை தாத்வார்த்தமாக தீர்க்க இயலும், “அன்பும் அரவணைப்பும்” அதற்கு ஒரு அற்புத கருவி என்பதையும் சொல்லும் படம். அஷ்டமாசித்திகளில் உள்ள ஒரு கலையின் சாதக பாதகங்களை வெகு நுட்பமாக கையாண்டுள்ள படம்.

நடிகர்கள் :

நாயகன் : பிரதாப் (படத்திலும் பிரதாப்)
நாயகி : பார்வதி (படத்தில் “சர்மிளா”) ; சுபா (படத்திலும் “சுபா”)
நாயகனின் நண்பனாக : ரகுமான் (படத்தில் “ரகு” )
முக்கிய கதாபத்திரங்களில் : வேலூர் வாசுதேவன் , ஆரணி A.D. மனோ, துரை மாமது.​

error: Content is protected !!