அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்! – AanthaiReporter.Com

அழவேணுமா (WannaCry) என்னும் பிணை வைரஸ் + ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதல் பற்றிய விபரம்!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து – இன்றைய தத்துபித்துவில் நாம் பார்க்க போவது…..இந்தியா முதல் அமெரிகக வரை 99 உலக நாடுகளை தன் வசபடுத்திய “WannaCry” என்னும் ரான்ஸம்வேர் எப்படி கையகபடுத்தியது மற்றும் இதனை விடுவிக்க பிட்டுகாயின் பிணைத்தொகை என்பது என்ன‌ என்ற அத்தனை விஷயங்களையும் முழசான உண்மைகளை படிக்க ரெடியா?

ravi may 14 தாக்குதல் என்பது மிகச்சாதரணமான விஷயம் என்பதை அனைவரும் அறிவோம். அதிலும் 78% வைரஸ் தாக்குதல் வின்டோஸ் என்னும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கொண்ட கணனியை நோக்கியே அனைத்து ஹேக்கர்களும் வெச்சு செஞ்சு வெளுத்துகாட்டிய வகையில் சமீபத்திய அழவேணுமா (WannaCry) என்னும் பிணைவைரஸ் அமெரிக்க முதல் லண்டன் உட்பட ஆந்திரா போலீஸ் சர்வர் வரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு நவீன இணைய தீவீரவாத தாக்குதலை எப்படி சமாளிப்பது என முழி பிதுங்கி நிற்கும் அவலத்தை க்ரிஸ்ப்பா பார்ப்போம்……

WannaCry என்னும் மால்வேரை உங்கள் கணனி மற்றும் சர்வர்களை நோக்கி எங்கிருந்தோ செலுத்தி கையகபடுத்தும் இந்த நவீன வேலையை செய்தது ஒன்று இரண்டு ஆட்கல் அல்ல ஷேடோ குருப் என்னும் ஒரு பெரிய குரூப் இதை செய்யும் வழி ரொம்ப சிம்பிள். எந்த ஒரு நிறுவனம் அது போலீஸாக இருக்கட்டும் ஆன்லைன் சைட்டாக இருக்கட்டும் இவர்களின் சர்வர் இனையம் மூலம் இனைக்கபட்டு ப்ராக்ஸி லொகேஷன் கணனி மூலம் இந்த சர்வர்களின் மூலம் டேட்டா பேஸ் விஷயங்களை தேட, சேர்ப்பது ஒரு வழக்கமே. இவ்வகை சர்வர்கள் அல்லது தனி கணனிக்குள் இவர்களின் மால்வேர்களை செலுத்து உடனே உங்கள் கணனியை MBR என்னும் மாஸ்டர் பூட் ரெக்கார்ட் மோடுக்கு கொண்டு சென்று நீங்கள் கணனனியை ஆன் நேரடியாக அல்லது சர்வர் வழியாக இனைக்கும்போது இந்த MBR லாகின் தான் தெரியும். அந்த பேஜில் இந்த கணனியை திரும்பவும் இயக்க வேண்டுமெனில் நீங்கள் இம்புட்டு துட்டு “பிட்காயின்” மூலம் செலுத்தனும்னு கணனிக்குள் டைம்பாம் வச்சிருவாங்க.

இதெலலம் சரி அது என்ன பிட்டுகாயின் என்றால் 12 வருடங்களுக்கும் முன்பு எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கணனி வேலையை செய்ய இந்த நாட்டில் இருந்து கமிஷன் / சர்சார்ஜ் மற்றும் ஃபாரின் எக்ஸேஞ் ரேட் கட்டி 100 டாலரை அந்த வேலை செய்பவருக்கு அனுப்பினால் அந்த பார்ட்டிக்கு 85 டாலர் மட்டும்தான் கிடைப்பது மட்டுமில்லாமல் அதற்க்கு 30% வரி வேற கட்டனும்ம்க்கிற நிலைமையை பார்த்து நாம எதுக்கு இவங்களுக்கு தன்டம் அழுவனும் நடுவுலன்னு இனைய பேமேன்ட் சிஸ்டம் முறை தான் இந்த பிட்டுகாயின் என்னும் டிஜிட்டல் கரென்ஸி. வெறும் 100 டாலர் இருந்த இந்த பிட்டுகாயின் ஒன்றின் விலை இப்போது 1லட்சத்தி 18 ஆயிரம் ரூவாய்கள். இதன் மூலம் சேதாரம் இல்லாம உங்க பிட்டு காயினை நீங்க வச்சி வியாபரம் செய்ய முடியும். கையில அல்லது பர்ஸில அல்லது வங்கியில இது வைக்க முடியாத ஆன்லைனில் மட்டும் சொத்தை பெருக்கும் இந்த பிட்டு காயின்கள் தான் இன்றைக்கு இந்த வைரஸ் அட்டாகிர்க்கு பினையப்பணம்.

இது நிறுவனங்களை மட்டுமல்ல தனி மனிதனின் ஆன்லைனில் ஒழுக்கமின்மை பழக்கம் கொண்ட சிற்றின்ப மனிதர்களை கூட விட்டு வைப்பதில்லை என்பது தான் உண்மை. சிலர் சேமிச்சு வைக்கும் கில்மா படங்கள், வீடியோக்கள் இருக்கும்பட்சத்தில் அந்த மனிதர்களை கூட டார்கெட் செய்து இந்த எம்பிஆர் மூலம் அட்டாக் செய்து பிட்டுகாயின் வாங்கியபிறகே அன்லாக் கோடை தருவார்கள். என்னை போல ஆட்களுக்கு இந்த நிலைமை வந்தால் நல்லதா போச்சு ரொம்ப நாளா நானே ஹார்ட்டிஸ்க் ஃபார்மெட் செய்யனும்னு நினைச்சேன் அதற்க்கு இப்போதான் நேர்ம்னு இதையெல்லாம் கொஞ்சமும் கவலையே இல்லாமல் எல்லாத்தையும் அழிச்சி திரும்பவும் முதல்ல இருந்துனு ஆரம்பிப்பது போல நிறுவனங்கள் செய்ய முடியாது என்பதால் இந்த பிட்டு காயினை தன்டமாக அழுதே தீரனும்.

என் எஸ் ஏ போன்ற உளவு நிறுவனங்கள் பல நிறுவனங்களை ஊடுறுவி உளவு பார்க்கும் முறையை கேர்லெஸ்ஸாக விட்டதின் காரணமே இந்த வான்டு க்ரை போன்ற அட்டாக்கிர்க்கு அடித்தளம் என கூறியிருக்கிறார் ஸ்னோடன் போன்ற கணனி பொறியாளர்கள். எது என்னவோ நடமாடும் தெய்வமான அம்மாவின் வயிற்றில் நீங்கள் நுழைந்து இதே போல வான்டு கிரை என்று பல தாய்மார்களை அழ வைக்கும் சில பொறுப்பற்ற பிள்ளைகளுக்கு எத்தனை பிட்டு காயின் கொடுத்தாலும் அவர் அன்புக்கு சமமாகாது என கூறி அவரை உயிர் உள்ள வரை நீங்களும் வாழ்த்தி வணங்கி சிறப்பான அன்னையர் தின வாழ்த்துகளை கூறி கொண்டாடும்மாறு கூறி கொள்கிறேன்.

PS – முக்கியமா இந்தியாவில் வேலை செய்யும் 91% ஏ டி எம் மெஷ்னிகள் இன்னும் அந்த வின்டோஸ் எக்ஸ் பி (Windows XP) சாஃப்ட்வேர் மூலம் செய்வதால் மைக்ரோசாஃப்ட் இந்த வெர்ஷனுக்கு சப்போர்ட்டை நிறுத்தி வருடங்கள் ஆனாலும் இந்த வெர்ஷனை வைத்து தான் இந்தியாவின் மெஜாரிட்டி ஏ டி எம்கள் இயங்குவதால் இந்த எம்பிஆர் மாஸ்டர் பூட் அட்டாகிற்க்கு அருகே உள்ளது எனிடைம் டமாலு டூமில் தான் இந்த ஏடிஎம்கள் நிலையும்.