தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதிஹாசன் சாதனை! – AanthaiReporter.Com

தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதிஹாசன் சாதனை!

உலக நாயகனின் மகளாஅக இருந்தாலும் கமல் தயவு இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமூக வலைத் தளமான ட்விட்டரில் தான் நடித்து வரும் படங்களின் புகைப்படங்கள், மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருவார். ரசிகர்களுடன் இவருடன் உரையாடி வருகிறார்..இந்நிலையில் இவரை  ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டிருக்கிறது. இது தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் இந்தளவிற்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இல்லை.

நடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இவரை 7.25 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ரஜினி 4.61, கமல் 4.63 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள் என்பதும் சமீப காலமாக புதுப் படங்கள் எதிலும் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாமல் தனது காதலர் மைக்கேலை திருமணம் செய்து கொண்டு அவர் செட்டிலாகக் கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பில்லா 2, அஞ்சான், துப்பாக்கி போன்ற படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால்-க்கு ஜோடியாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன்வ ஒப்பந்தமாகி உள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது!.