“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர்

“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர்

நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின் றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்ப ளவில் உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின்னர், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,

தமிழ்நாட்டில் மேலும் 3 கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும்.

திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என கூறிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!