குடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது!

குடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது!

குடியுரிமை சட்ட திருத்தம் மசோதாவை எதிர்த்து ஜாமியா மீலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை ஏற்பட்டதால் 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே இப்பிரச்னைக் குறித்து பிரதமர் மோடி, ‘நாங்கள் கொண்டு வந்த குடியுரிமைதிருத்தச் சட்டம் 1000 சதவீதம் சரியே. ஆனால் காங்கிரசின் செயல் பாடுகளை பார்க்கிற போது பார்லிமென்டில் நாங்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியே என்றே நிரூபிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் சரி.. அசாமிலும் சரி. காங்கிரஸ் தான் வன்முறையை துாண்டி விடுகிறது. அதை மக்களும் பார்க்கிறார்கள். இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நாட்டையே மோடியும் பார்லிமென்டையும் காப்பாற்றி விட்டோம் என்பதைத்தான் நாட்டில் நடக்கிற காட்சிகள் காட்டுகின்றன’ என்றார்,

மோடி அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அசாம் மாநிலம், கவுகாத்தி, திப்ருகார் உள்ளிட்ட இடங்களில், போராட்டங்கள் தொடர்கின்றன. கவுகாத்தியில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 30 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்திலும் போராட்டங்கள் தொடர்கின்றன. அங்குள்ள, அக்ரா (Akra) ரயில் நிலைய வளாகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், கண்ணில் எதிர்படுவதை தீ வைத்துக் கொளுத்தி, வன்முறை வெளியாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம், போராட்டங்கள் தூண்டப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மால்டா, ஹவுரா, முர்சிதாபாத் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து, பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும், 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில், ஜே.எம்.ஐ பல்கலைக்கழக மாணவர்கள், காளிந்தீ குன்ஜ் (Kalindi Kunj) சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரிதா விஹார்(Sarita Vihar), மதுரா(Mathura) சாலையில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியிலும்,(New Friends Colony) போராட்டம் நடைபெற்றது. காளிந்தீ குன்ஜ் சாலை போராட்டத்தின்போது, 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜமாலியா மிலியா இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில், வன்முறைக்கும், 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல, தீவைப்புச் சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. உள்ளூர் சக்திகள் போராட்டத்துக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்ததாகத் தெரிவித்துள்ளனர். எங்கள் போராட்டம் அமைதியானது அஹிம்சா வழியில்தான் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்துகிறோம்என்று மாணவர்களின் அறிக்கை கூறியுள்ளது.மாணவர்களின் போராட்டத்தால் ஏற்கனவே, ஜனவரி 5ம் தேதிவரை ஜாமியா பல்கலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி தும்காவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது, “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் சிறுபான்மை மக்களாக இருந்து அவதிப்பட்டு இந்தியாவுக்கு தப்பிவந்து அகதிகளாக வந்தவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் நோக்கில் தான் பார்லிமென்டின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், இதை எதிர்த்து காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை மவுனமாக நடத்துகின்றன. மக்களிடையே வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். அசாமில் வன்முறையை புறக்கணித்து தற்போது அமைதிக்கு திரும்பிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகள் மக்களின் துன்பங்களை பற்றி கவலைப்படவில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்களின் ஆடையை வைத்தே யார் வன்முறையை தூண்டுகிறார்கள் என்பதை மக்கள் அறியலாம்.

நாங்கள் கொண்டு வந்த குடியுரிமைதிருத்தச் சட்டம் 1000 சதவீதம் சரியே. ஆனால் காங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கிற போது பார்லிமென்டில் நாங்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியே என்றே நிரூபிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் சரி.. அசாமிலும் சரி. காங்கிரஸ் தான் வன்முறையை துாண்டி விடுகிறது. அதை மக்களும் பார்க்கிறார்கள். இந்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நாட்டையே மோடியும் பார்லிமென்டையும் காப்பாற்றி விட்டோம் என்பதைத்தான் நாட்டில் நடக்கிற காட்சிகள் காட்டுகின்றன” என்றார்.

error: Content is protected !!